308
அப்பாத்துரையம் - 16
இத்தொல்லைகளிலிருந்து காப்புப் பெற உதவும்படி காஞ்சிப் பகுதியை அவர்கள் வசமே விட்டிருந்தான் என்று தெரிகிறது.1192- க்குள் இக்காரணத்தால் அவர்கள் கிட்டத் தட்டத் தன்னாட்சி யுடையவர்களாய்,காஞ்சியையும்தம்வசத்திலேயே கொண்டிருந்தனர். நல்ல சித்தரசன், தம்முசித்தரசன், திருக்காளத்தி தேவன் என்பவர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் காஞ்சி யாண்ட அரசரென்ற இவ்வுரிமை கொண்டாடினர்.
வடதிசைத் தொடர்பு
மூன்றாம் குலோத்துங்கனின் குடுமியாமலைக் கல்வெட்டு, அவ்வரசன் வேங்கை நாட்டைவென்று உறங்கைமாநகர் (ஓரங்கல்) அல்லது வாரங்கல் புகுந்தான் என்று கூறுகிறது. சோழர் இச்சமயம் இவ்வளவு நெடுந் தொலைவிலுள்ள ஒரு நகரை இத்தகைய படை யெடுப்புக் குரியதாக்கும் ஆற்றல் உடையவர்களாய் இருந்திருக்க முடியாது. ஆனால், ஓரங்கல் ஆண்ட பேரரசன் வேங்கை நாடு கடந்து சோணாட்டுக்குள் படையெடுத் திருக்கக் கூடும். தெலுங்குச் சோடருடன் சேர்ந்து குலோத்துங்கன் அவனை முறியடித்தனுப்பியிருக்க வேண்டும். இதனையே வேங்கை வென்று உறங்கை (ஓரங்கல்) புகுந்ததாக அக்கல்வெட்டுக் குறித்திருக்கலாம்.
புதிய பேரரசுப் போட்டி:
சோழ - பாண்டியப் போராட்டத் தொடக்கம்: மட்டியூர், கழிக்கோட்டைப் போர்கள்: 1202
மூன்றாம் குலோத்துங்க சோழன் உதவியால் அரியாசனம் ஏறிய விக்கிரமம பாண்டியன் பிற்காலப் பாண்டியப் பேரரசின் முதல்வன் ஆவன். தற்கால மதுரை, இராமநாதபுரம், திருநெல் வேலி மாவட்டங்களடங்கிய பாண்டிநாடு முழுவதும் அவன் ஆட்சிக் குட்பட்டிருந்தது. பழய பாண்டியப் பேரரசரின் கனவு களும் எண்ணங்களும் அவன் உள்ளத்தில் உலவி அவன் ஆட்சிப் போக்கி லேயே ஒளிவீசுகின்றன. அவன் அரசியல் தலைவன் களவழி நாடாள்வானான சயங்கொண்ட சோழ வள்ளுவன் என்பவன். தன் அரசிருக்கைகளுக்கு அவன் மழவராயன், முனைய