தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
315
அடிமைப் படுத்தி, தனக்குக் கீழ்ப்பட்ட ஒரு சிற்றரசன் ஆக்கினான். ‘இருவர் பாண்டியர் முடித்தலைக் கொண்ட மகா ராசாதி ராச நரபதி' என்றும் அவன் பட்டம் சூட்டிக் கொண்டான்.இருவர் பாண்டியர் என்றது சுந்தரபாண்டியன் II - ம் அவன் முன்னோனுமாக இருந்தல் வேண்டும்.
திக்க நிருபதி அல்லது கண்ட கோபாலன் என்ற வலிமை வாய்ந்த தெலுங்குச் சோடன் சோழன் நண்பராயிருந்ததால், அவன் உதவியுடன் சம்புவராயன், சேதிராயன், காடவராயன் ஆகியவர்களை இவன் அடக்கினான். சம்புவராயன் நாடு சங்ககால முதல் மாவிலங்கை என்றழைக்கப்பட்டது. சம்புவராயரும் சில சமயம் தம்மை இராட்சதர்கள் என்று கூறிக் கொள்வதுண்டு. இதை அடிப்படையாகக் கொண்டு 'வட இலங்கை இராட்சதர்களை வென்ற வீரராமன்' என்று மூன்றாம் இராசேந்திரன் தன்னை அழைத்துக் கொண்டான்.
ஹொய்சளர் சோழருக் கெதிராகத் திரும்பிய போதும் கண்டகோபாலன் உண்மையான சோழ நேசனாயிருந்து 'சோழ ஸ்தாபனா சாரியன்' என்று தன்னைப் பெருமையுடன் அழைத்துக் கொண்டான்.
தெலுங்குப் பெருங்கவிஞன் திக்கணனை ஆதரித்த அரசன் இந்தத் திக்க நிருபதி அல்லது கண்ட கோபாலன் என்ற தெலுங்குச் சோடனே.
ஹொய்சளர் சதுரங்க ஆட்டம்
பாண்டியர் வளர்ச்சி கண்டு அஞ்சி ஹொய்சளர் சரிந்து வரும் சோழ அரசை ஆதரித்தனர் சோழ அரசு மீண்டும் தலைதூக்குவது கண்டதே. அவர்கள் பாண்டிய அரசுக்கு உதவத் தொடங்கினர். முன்பு 'சோழ குலரட்சகர்' என்று தம்மைக் குறித்தது போலவே, இப்போது 'இராசேந்திரனைப் போரில் வென்றவர்' என்று விருது கூறிக் கொள்ளத் தயங்கவில்லை.
வீர நரசிம்மனின் புதல்வனான வீர சோமசுவரன் இரா சேந்திரன் மீது படையெடுத்துப் பாண்டிய நாட்டை அவனிட மிருந்து மீட்டுப் பாண்டியனுக்கு அளித்தான், முந்திய தலை முறையின் பட்டங்களைத் தலைகீழாக்கியது போலவே,