உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(324

அப்பாத்துரையம் - 16

இரவிவர்மன் குலசேகரன் முதல் முதல் அந்நாளைய திரு வாங்கருக்கு வடக்கேயிருந்த கொல்லத்தையும் பிற வடமலை யாள நாடுகளையும் வென்று கொல்லத்தில் தன்னைப் பேரரசனாக முடிசூட்டினான். அதன் பின் அவன் 1312-ல் சுந்தரபாண்டியனை வென்று சீகாழியில் சென்று மூவேந்தரும் வென்ற தமிழகப் பேரரசன் என்று திரும்பவும் முடிசூட்டிக் கொண்டான். இறுதியில் தெலுங்குச் சோடரையும் கீழடக்கிக் காஞ்சி புரத்தில் மூன்றாவது முடி சூட்டி விழா நடத்தினான்.

சிற்றரசனாயிருந்த திருவாங்கூர் அரசுமரபில் தமிழக மலை யாளப்பகுதி முழுதும் தெலுங்கு நாட்டின் ஒரு கூறும் வென்று சில ஆண்டுகளேனும் ஆண்ட பேரரசன் திருவாங்கூர் நெப்போலியன் -அவன் ஒருவனே. ஆனால், அவன் ஆட்சி ஒரு சில ஆண்டுகளுக்கு மேல் நிலைக்க வில்லை.

சுந்தர பாண்டியன் இப்போது காகதீய அரசன் இரண்டாம் பிரதாபருத்திரன் உதவி கோரினான். அவன் முப்பிடி நாயகன் என்ற தலைவனை அனுப்பி 1317-ல் இரவிவர்மன் குலசேகரனை முறியடித்து அவனைப் பழைய திருவாங்கூர் எல்லைக்கே துரத் தினான்.வீர பாண்டியனும் இத் தோல்வியால் ஆற்றலிழந்தான். சுந்தர பாண்டியன் ஆட்சியே உறுதிப்பட்டது.