உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம் - 16

அத்தகையவருள் ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தின் தமிழ் விரிவுரையாளரான உயர்திரு இரா. இராகவையங்கார். அவர் இராமாயண பாரதங்களின் வாய்மையையும் அதற்குத் துணைசெய்யும் தமிழ்ப்பாடல்களையும் ஏற்று ஆராய்ச்சித் துறையில் ஆரிய திராவிட சமரசம் கண்டுள்ளார்.

"கௌதமனார் பாடிய புறப்பாட்டும், முடிநாகராயர் புறப்பாட்டும் பாரத காலத்தனவென்று நினைத்தற்கேற்ற அகச்சான்றுகளுடன் சிறந்து விளங்குதல் அவைவல்லார் நன்குணர்வர்” என்பது அவர் முடிவு.

திரு இராகவையங்கார் முடிவே திரு.கா. சுப்பிரமணிய பிள்ளை, மறைத்திரு மறைமலையடிகள் ஆகியோரும் ஏற்ற முடிவு எனலாம். ஏனெனில், பாரத நிகழ்ச்சிக்குரிய காலமே புறநானூற்றின் இப்பழம் பாடல்களின் காலம் என்று அவர்கள் கொண்டனர். புராணக் கணிப்பின்படி பாரதப்போர் மூன்றாம் ஊழியிறுதியில் அதாவது கி.மு. 3200-ல் நிகழ்ந்ததாக வேண்டும். ஆனால், சமஸ்கிருத ஆராய்ச்சியாளர் ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலம் கி.மு.1500 என்றே கருதுவதால், பாரத காலத்தையும் அதற்கேற்ப கி.மு.1000 என்று முடிவு செய்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட சமரஸ முடிவு சமரசமான முடிவு மட்டு மல்ல; தமிழ் சமஸ்கிருத ஆதாரங்களுடனொத்த நேர்மையான முடிவும் ஆகும். ஆயினும் ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்து நெடுநாளாகாத அவ்வளவு பழைய காலத்திலேயே, யமுனைக் கரை ஆரியருக்கும் தென்னிந்தியாவின் தென்கோடிக்கும் இடையே அவ்வளவு நட்புறவு ஏற்பட்டிருக்க முடியும் என்று கருதுவது பொருத்தமற்றதாகவே உள்ளது.

திருத்தந்தை ஹீராஸ் ஆராய்ச்சி ஒளி

இராமாயண பாரதங்களின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும் நாகரிகத்தின் மீதும் திருத்தந்தை ஹீராஸின் ஆராய்ச்சிகள் ஒரு புதிய ஒளியை வீசியுள்ளன.

இராமாயண

பாரதங்கள் இன்று ஆரியருடைய இதிகாசங்கள் என்றும், ஆரியர் ஆக்கியன மட்டுமல்ல, ஆரிய அரசுகள் பற்றியனவே என்றும்தான் பொதுவாகக் கருதப்படு