உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

41

காட்டுகின்றன. சீர்அருடன் ஆற்றின் நடுவே இங்ஙனம் அடி பொறிப்பதற்குரிய ஒருபெரும் பாறையிருக்கிறது. இதில் பூர்ண வர்மன் என்ற பெரியோன் அடிவைத்த செய்தி குறிக்கப் பட்டுள்ளது. இம் மன்னன் பெயருடன் 'நெடியோன்' என்று பொருள்படும் தொடரும் உள்ளது.

"தருமா நகர்த் தலைவனும் உலகை ஆள்பவனுமாகிய நெடியோன் ஸ்ரீமான் பூர்ணவர்மனின் (விஷ்ணுவின் அடிகளை ஒத்த) இணையடிகள்”

"விக்ராந்தஸ்யா வனிபதே ச்ரீமத; பூர்ண வர்மண; தருமா நகரேந்துஸ்ய விஷ்ணோரிவ பதத்வயம்”

என்பதே இந்தக் கல்வெட்டு (இந்தியப் பழமை ஏடு III 355-58)

இதில் தருமா நகர் என்பது கொற்கையே என்று சமஸ்கிருத ஆதாரம் காட்டி முடிவு கொள்கிறார், இரா. இராகவய்யங்கார் அவர்கள். வேறு சிலர் அதைக் கன்னியாகுமரி அடுத்த ஓர் இடம் என்று கூறுவதாகவும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார். இருவகையிலும் இங்கே காட்டப்பட்டகல்வெட்டிலும் வேறு பல கல்வெட்டுகளிலும் குறிக்கப்பட்ட பூர்ண வர்மன் முந்நீர் விழாவின் நெடியோன்தானோ என்று கருத இடமுண்டு. அவை நெடியோன் கல்வெட்டுகளானால் அவை ஏன் தமிழில் எழுதப்பட வில்லை, சமஸ்கிருதத்தில் எவ்வாறு எழுதப்பட்டது என்று அறிய முடியவில்லை. ஏனென்றால் இவ்வளவு பழமை யான காலத்தில் சமஸ்கிருத மொழி உருவாகியிருக்க வழியில்லை.

நெடியோன் புகழ் மரபு

நெடியோன் சங்க காலத்திலே பழம் புகழுடையவனாகப் பல பாடல்களில் (கலி. முல்லை; 4; சிலப்பதிகாரம் அழற்படு காதை 56-61) சிறப்பிக்கப்படுகிறான். பிற்கால இலக்கியங்களிலும் இவன் பெயர் நீடித்து நிலவி வந்துள்ளது.

தமிழகத்தில் மிகப் மிகப் பழமையான அரசன் என்று கூறுவதன்றி, இன்று இவன் காலத்தையோ பழமை யெல்லையையோ நாம் கணித்து வரையறுத்துக் கூற முடியவில்லை. பாரதப் போரை ஒட்டிப் பெருஞ் சோற்றுதியனுக்குக் கி.மு.1000