உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் - 16

மரபுகளைப் போல் ஆராய்வதற்குரியன அல்லது புதிய ஆராய்ச்சியின் நுனித் தும்புகளாகக் கருதுவதற்கு மாறாக, அவற்றைப் புராண மரபுகளைவிடப் போலி எனப் புறக்கணிக்க இது இடந்தந் துள்ளது. புராண மரபுகளிலும் தமிழ்த் தொடர்பு நீக்கி அயல் தொடர்புக்கே ஆர்வ நாட்டம் காட்டும்படி இது தூண்டியுள்ளது.

தமிழர் -மேலை உலகத் தொடர்பு, தமிழர்-கீழை உலகத் தொடர்பு ஆகியவற்றைவிட, தமிழர் வட உலகத் தொடர்பையே இந்த அயல் மரபு நாட்டம் பெரிதும் பாதிக்கிறது.