உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 16

உலகில் பரவுவதற்கும் பரவி வளர்ந்து நீடிப்பதற்கும் தடையாய் அமைந்த திசை வடதிசையே. பண்டை மேலை நாகரிகங்களில் பெரும்பாலானவையும், கீழை நாகரிகங்களில் பலவும்

வ்வடதிசை வாடைக்கு இலக்காகியே அழிவெய்தியுள்ளன. கீழ் கோடியில் சீனமும், மேல் கோடியில் தற்கால மேலை ஐரோப்பாவும் தமிழகமும் மட்டுமே அவ்வாடைக்கு முற்றிலும் ஆட்படாமல் உயிர்வளர்ச்சி பெறுகின்றன.

தமிழக வடதிசைத் தொடர்புகளும், தமிழக - உலகத் தொடர்புகளும் சரிவர உணரப்படாமலும் சரிவரப் பயன்படுத்தப் பெறாமலும் தடை செய்து வருவதும் இவ்வாடையே.

தமிழக-உலகத்

தொடர்புகளில் மேலையுலகத் தொடர்புக்கே நமக்கு இதுவரை பழமையான சான்றுகள் மிகுதியாகக் கிட்டியுள்ளன. ஆனால், மேல் திசையில் எந்த நாகரிகமும் தொடர்ச்சியான நீடித்த வாழ்வுடையதாயில்லை. நாகரிகங்கள் அத்திசையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி அழிந்து, புதுப்புது நாகரிகங்கள் எழுந்து வளர்ந்து வந்துள்ளன. ஆகவே தமிழகத்தின் மேலைத் தொடர்புகள் ஒரு தலைமுறைத் தொடர்பாயிராமல், பல மேல் திசைத் தலைமுறைகளின் தொடர்பாக இருந்து வருகிறது. ஆனால், கீழ்திசைத் தொடர்புகள் மேல் திசையுடன் ஒத்த பழமையுடையவை மட்டுமல்ல; அவற்றைவிடப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியுமுடையவை. அவற்றுள் பல -சீன சப்பானிய, தென் கிழக்காசிய நாகரிகங்கள் - தமிழகத்துடனொத்த நீடித்த ஒரே தலைமுறைத் தொடர்பாய், தமிழகத்தின் உயிர்த்துணை நாகரிகங் களாக நிலவுகின்றன. தமிழகத்துடன் அவை மூவாயிரமாண்டு தொடர்ந்த உறவுடையன.

வடதிசை, தென்திசை வண்ணங்கள்

வடதிசையில் கங்கை இமய எல்லைகள் பற்றியவரை, தமிழகத் தொடர்பு பழமையில்குறைந்ததன்று. குறைந்த அளவில் நெடியோன் காலமுதல், ஒருவேளை அதற்கும் முற்பட்டே தமிழக வாழ்வும், நாகரிக ஒளியும் அவ்வெல்லை வரை படர்ந்து, பல சமயம் அது கடந்தும் பரவியதுண்டு, அத்துடன் இது பண்டை மேலை உலகத் தொடர்புகள்போல இடையிடையே அறுபட்டு