68
அப்பாத்துரையம் - 16
காண்கிறோம்; தமிழர் கலையார்வத்தின் அருமையையும், ஆட்சியெல்லை கடந்த தேசிய ஆர்வத்தின் பெருமையையும் பார்க்கிறோம்; ஏனெனில் கரிகாலனும் சோழன்தான்; சோழன் மீதுள்ள கோபம் அவன் மீது பாயவில்லை. ஏனெனில் அவன் பாடல் கொண்ட சோழன்! தமிழகத்துக்குத் தேசியப் பழம் புகழளித்த சோழன்! கலையார்வம், தேசிய ஆர்வம், வரலாற்று மரபு ஆகிய மூன்றும் இங்கே பன்னிரண்டு நூற்றாண்டுகள் தாண்டிச் செயலாற்றுவது காண்கிறோம்.
சங்க இலக்கியத்தின் உதவி கொண்டு நாம் இன்று தமிழர் வாழ்க்கை பற்றியும், அறிவு நிலைபற்றியும், அரசியல் சமுதாயப் பழக்க வழக்கங்கள் பற்றியும் அறியும் செய்திகள் பல. அவற்றால் நாம் அறியவரும் போர்களின் தொகையும் நூற்றுக்கணக்கானது. வரலாற்று மரபு இழந்த நம் நாட்களில் அவற்றுள் பலவற்றின் முன்பின் வரிசை முறை, கால இடச்சூழல்கள் ஆகியவற்றை முற்றிலும் விளக்கமாக அறிய முடியவில்லை. வருங்கால ஆராய்ச்சி களே அவற்றுக்கு மேலும் விளக்கம் அளிக்க வேண்டும். ஆயினும் தேசிய வாழ்வின் பொதுப்போக்கை உணர்த்தும் பெரும் போர்கள் சிலவற்றை நாம் உருவகப்படுத்திக் காணமுடியும்.
கரிகாலன் புகழ் வளர்ச்சி: மலைப்பளிக்கும் பெரும் புதிர்
தமிழிலக்கியத்தில் மட்டுமன்றி, தமிழகம் சூழ்ந்த பல நாடுகளிலுள்ள பல மொழிகளின் இலக்கியத்திலும், அது போலவே பல நாடுகளின் கல்வெட்டுகளிலும் பல நாட்டு மக்கள் உள்ளங்களிலும் புகழ் பரப்பிய பண்டைத் தமிழ்ப் பேரரசன் கரிகாலன். அவன் புகழ் அவன் காலத்தில் மட்டுமன்றி அது கடந்தும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது கண்டு தமிழார்வலர்கூட வியப்பும் மலைப்பும் எய்து கின்றனர். வரலாற்றாராய்ச்சியாளர்களோ, இவ்வகையில் திகைப் பும் குழப்பமும் அடைகின்றனர். இலக்கியத்திலும் சரி, கல்வெட்டுகளிலும் சரி காலமும் தேசமும் மொழியும் தாலைவாகும்தோறும் புகழ் வளர்வது கண்டு, அவர்கள் பழங்கால இலக்கியச் சான்றுகளை மட்டுமே வரலாற்று மெய்ம்மை எனக் கொள்கின்றனர். பிற்காலக் கல்வெட்டுச்