உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

95

பிறந்தவன். 16 வயதுடைய இளைஞனாயிருக்கும் போதே கிருஷ்ண தேவராயனின் அடைப்பக்காரனாக அவனுக்குத் தொண்டனாகி,அப்பேரரசனுடன் கலிங்கப் போர்களில் சென்று பணியாற்றியவன். பேரரசனின் நன்மதிப்பைப் பெற்றதனாலே அவன் இரேய்ச்சூர்ப் போரில் ஒரு சிறு படையின் தலைமை யளிக்கப் பட்டான்.

அவன் 1529-ல் கிருஷ்ண தேவராயன் ஆட்சியின் கடைசி ஆண்டிலேயே மதுரைப் பிரதிநிதியாக அமர்வு பெற்றிருந்தான். 1509 -முதல் 1532-வரை ஒரு தடவையும், 1533- முதல் 1542- வரை ஒரு தடவையும் அவன் பிரதி நிதியாக இருந்து நல்ல சேவை செய்தான். அவன் ஆட்சிப் பகுதிகளுக்கு இடைப்பட்ட காலமே அச்சுதராயன் தென் திசை வெற்றிக்குரிய காலம் ஆகும். அவ்வெற்றியின் பின் அவன் ஆட்சி எல்லையும் சற்று விரிவு பட்டிருந்தது.ஆனால், அச்சுதராயன் ஆட்சிக்குப் பின்னரே அவன் மாமண்டல நாயனாக்கப்பட்டான்.

மலையடி வாரப் போர் : 1533

அரசுரிமைப் பூசலின் முடிவில் பேரரசுமீது பகைமையுற்ற சாளுவ வீர நரசிம்மன் என்ற செவ்வப்பன், தான் ஆட்சி புரிந்து வந்த சோணாட்டுக்குச் சென்று கிளர்ச்சிக் கொடி உயர்த்தினான். இக்கிளர்ச்சியில் உம்மத்தூர்த் தலைவனும், திருவாங்கூர் அல்லது வேணாட்டு அரசனான திருவடி ராஜா உதய மார்த்தாண்ட வர்மனும் கலந்து கொண்டனர். பேரரசன் அச்சுதராயன் 1532-ல் காஞ்சிபுரம் வந்து தன் எடை பொன் கொடை வழங்கும் துலாபார விழா வாற்றிய பின், படையுடன் திருவரங்கம் வரை வந்தான். ஆனால், சாளுவ வீரநரசிம்மன் இதற்குள் தண்டனைக்கு அஞ்சித் திருவாங்கூருக்கே ஓடி ஒளிந்து கொண்டான்.

இச்சமயம் தென் பாண்டி நாட்டை ஆண்டவன் சடைய வர்மன் சீவல்லப் பாண்டியன் (1534 - 1543). கிளர்ச்சியின் சூழ் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு திருவாங்கூர் மன்னன் அவனுக்குரிய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். தென் பாண்டி நாடெங்கும் அம்மன்னன் கல்வெட்டுக்கள்