உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

113

விசயநகரத்தின் முஸ்லிம் படைத்தலைவர்களைச் சந்தித்து அவர்கள் உள்ளத்தை தம் பக்கமாகக் கரைத்தனர். மூன்றாவதாக இணக்க நேச நடவடிக்கைகளில் ஒன்றாகக் கிருட்டிணையாற்றைக் கடக்க இருந்த இடத்திலிருந்து முஸ்லிம் மன்னர் படைகள் விலகிச் செல்வதாகப் பாவிக்கப் பட்டது. இதை நம்பிய விசய நகரப்படைகள் அத்திசையிலிருந்த காவலை வேறு திசைக்கு மாற்றிற்று. இதற்கே காத்திருந்த முஸ்லிம் மன்னர் படைகள் ஆற்றைக் கடந்து வந்து படைப் பாசறையையே தாக்கத் தொடங்கின.

திடீர்த் தாக்குதலால் ஏற்பட்ட குழப்பத்தை இராமராயன் மிக எளிதில் சமாளித்தான்.

விசயநகரப் படைகளின் நடுப் பேரணியின் களப்போரில் இராமராயனே தலைவனாயிருந்தான். அவனை எதிர்த்து மறு பக்கத்தில் அகமது நகர் அரசன் நிஜாம் ஷாவும் அவன் படைகளும் நின்றன. இராமராயன் இடது புற அணி அவன் தம்பி திருமலை தலைமையிலும், வலதுபுற அணி மற்றத் தம்பியான வெங்கடாத் திரியின் தலைமையிலும் நின்றன. திருமலையை எதிர்த்து மறுபுறம் பீஜப்பூர்ப் படைகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

தென்னகத்தின் வரலாற்றையே பெரிதும் மாற்றியமைத்த இப்பெரும் போர் நான்கு மணி நேரத்துக்குள்ளாகவே முடி வடைந்து விட்டது என்று தெரிகிறது. போர் வெற்றி விசய நகரத்தின் பக்கமே மேன்மேலும் சாய்ந்து வருவது கண்டு இஸ்லாமிய மன்னர் தம் கடைசிச் சூழ்ச்சித் துருப்பையே தட்டி விட்டனர். போரின் உயிர் நெருக்கடியான கட்டத்தில் விசயநகரத்தின் முஸ்லிம் பெரும்படைத் தலைவர்களில் இருவர் திடுமென எதிர்ப் பக்கம் சேர்ந்து தம் மன்னனையே எதிர்க்கத் தொடங்கினர். அவர்கள் ஒவ்வொருவர் கீழும் எழுபதினாயிரம் எண்பதினாயிரம் படைவீரர் இருந்ததனால், இது போரின் போக்கையே மாற்றிற்று. இதனைக் கண்டு இராமராயன் சிறிது நேரம் அதிர்ச்சியுற்றுத் திகைப்படைந்தான். பின் அதனால் ஏற்பட்ட குழப்பத்தைச் சமாளிக்க அரும் பாடு பட்டான்.ஆனால், துரதிருஷ்டவசமாக, அக்குழப்பத்தினிடையே அவன் அகமது நகர் அரசன் கையில் சிறைப்பட்டான். நிஜாம் ஷா அக்கணமே அவன்