6
116
அப்பாத்துரையம் - 17
போகாமல் இருந்தால், அதை நாம் மனக்கண்ணால்கூட மதிப்பிட்டுக் காண முடியாது. அந்நகரின் அழிபாடுகளிடை யேயும் தென்னகமெங்கும் விசயநகரப் பேரரசர் பாரிய கோயில் பணிகளிலேயும் அவர்கள் கலைப் பெருமையை இன்னும் காண்கிறோம்.
நகரின் சுற்றளவு 28 கல்லென்பது அதன் பெருமையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
தும்பிச்சி நாயகன் எழுச்சி: 1565
மதுரை மாமண்டலத்தில் விசுவநாத நாயகனுக்குப் பின் மதுரை அரசு மரபு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் தமிழகத்தின் வல்லரசாக நீடித்தது. விசுவநாத நாயகன் புதல்வன் முதலாம் கிருட்டிணப்ப நாயகன் (1569 - 1572) தலைக்கோட்டைப் போருக்கு முந்திய ஆண்டே அரசிருக்கை ஏறினான்.பெயரளவில் அவன் பின்னோருள் பலரும் விசயநகரப் பேரரசின் மேலுரிமையை ஒப்புக் கொண்டு அவ்வப்போது திறையனுப்பி னாலும், அவர்கள் சிறிது பழம் பாசத்தொடர்புடைய தனி வல்லரசாகவே பெரிதும் இருந்தனர் என்னலாம்.
கிருட்டிணப்பன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டிலேயே தொட்டியர் தலைவனாகிய தும்பிச்சி நாயகன் துரை நாயகத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். இதற்கு முக்கியமான காரணம் பாளையக்காரர்களுள் ஒருவராக அவன் நடத்தப்பட விரும்பாததே யாகும். வரலாற்று ஆதாரங்கள் அவனைச் சில்லவார் கோமான்' 'வங்கமன்னன்' என்று புகழ்கின்றன. அச்சுதராயன் காலத் தமிழகக் கிளர்ச்சியிலேயே அவன் மரபினர் ஈடுபட்டிருந்தனர். மதுரைக்குக் கீழ்ப்படாமல் தன்னாண்மை பெற அவன் எண்ணினான். தன் பரமக்குடிக் கோட்டையைச் செப்பம் செய்து வலுப்படுத்திக்கொண்டு வீரர் பலரைத் திரட்டிச் சுற்றிலும் உள்ள மதுரையாட்சிப் பகுதிகளைச் சூறையாடத் தொடங்கினான்.
கிருட்டிணப்ப நாயகன் இக்கிளர்ச்சியை அடக்குவதில் விரைவும் திறமும் காட்டினான். விசுவநாதன் காலத்திலிருந்தே திறம்படப் பணியாற்றிய தளவாய் பெத்த கேசவப்ப நாயகன் மகன் சின்ன கேசவனை அவனை அடக்கும்படி அனுப்பினான்.