உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

அப்பாத்துரையம் - 17

பேச்சுடன் நில்லாமல் விசயநகரப் பேரரசின் பிரதிநிதி என்ற முறையில் மதுரைநாயகனுக்குத் திறையனுப்பாமலிந்ததே படையெடுப்பின் காரணமாயிருந் திருக்க வேண்டும் என்பதைப் போரின் போக்கும் முடிவும் காட்டுகின்றன.

கிருட்டிணப்ப நாயகன் தமிழகத்தின் 52பாளையக்காரரை அவர்கள் படைகளுடன் அனுப்பினான். அவர்கள் நவபாடாணத் துறைமுகத்தில் கப்பலேறி மன்னார் துறைமுகத்தில் சென்று இறங்கினார்கள். அங்கிருந்து அனுப்பப்பட்ட தூதனிடம் திறை தந்து பணிய மறுத்துக் கண்டி அரசன் நான்கு அமைச்சர் களையும் எட்டு மாகாணத் தலைவர்களையும் (தேச நாதர்களையும்), 40,000 படை வீரருடன் நாயகப் படைமீது ஏவினான்.

நாயகப் படைகளின் தலைவன், தும்பிச்சி நாயகனை அடக்கிய சின்ன கேசவ நாயகனே. அவன் புத்தளத்தில் ஆற்றிய போரில் வெற்றி கண்டு இருபதினாயிரம் வீரரையும், அமைச்சர்களில் இருவரையும், மாகாணத் தலைவர்களில் ஐவரையும் சிறைப் பிடித்தான். சிறைப்பட்டவர்களைச் சின்ன கேசவ நாயகன் நல்லாதர வுடன் நடத்தி அவர்களில் சிலரையே மீண்டும் தூதராக அனுப் பினான். பணிந்து போகும்படிஅவர்கள் கண்டி அரசனை மீண்டும் பணிந்து வேண்டினர். ஆனால், அவன் பணியாது மறுத்து மீண்டும் போருக்கெழுந்தான்.

இரண்டாவது போர் முன்னிலும் கொடியதாயிருந்தது. கண்டிப் படைகளில் 60,000 நாட்டு வீரரும் 10,000 அயலவரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அயலார் (காபிரிகள்) என்று இங்கே குறிக்கப்பட்டது போர்ச்சுகீசயராய் இருத்தல் கூடும். இப்போரிலும் 8,000 நாட்டு வீரரும் 8,000 அயலவரும் உயிரிழந்தனர். ஆனால், கண்டியரசன் பணிந்து கொடுக்கவு மில்லை. உயிருடன் சிறைப் படவும் மறுத்தான். அவன் உயிரற்ற சடலமே நாயகப்படைத் தலைவன் கைப்பட்டது. ஆனால், இங்கும் படைத்தலைவன் பெருந்தன்மை காட்டி அரசனுக்குரிய மதிப்புடன் அவ்வுடலைத் தலை நகருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தான்.

இறந்த அரசன் குடும்பத்தினர் இலங்கையின் பழைய தலை நகரத்துக்கு மதிப்புடன் அனுப்பப்பட்டனர். மதுரை மன்னன் கிருட்டிணப்பன் இலங்கையில் மூன்று நாள் தங்கியிருந்தான். தன்