உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

125

கவியன் கவிராயன் வரதுங்கராம பாண்டியன் முடிசூட்டு விழா வில் பாடிய மங்கலப் பாடல்களில் (நாள் மங்கலம், குடை மங்கலம், வாள் மங்கலம் என்ற மும் மங்கலப் பாடலில்)

பற்றலர் மண் கொள்ளும், பணிந்தார்க்கு அரசளிக்கும் கொற்றம் உயர்க்கும், அறங்கூறுமே -வில்தடம் தோள் வில்லவனை வென்று கொண்ட வீரமாறன் செழியன் வல்லம் எறிந்தான் ஏந்து வாள்

என்று வல்லத்து வெற்றியையும் குறித்துள்ளது.

வாண மரபினர்க்குரிய பழைய தலை நகர் வட ஆர்க்காட்டு வல்லமே. தஞ்சை வல்லமும் அவர்கள் தென்திசை வெற்றிகட்குரிய தாகலாம். வாணாதிராயன் அழிவுற்ற பின்தஞ்சை வாணன் இப்பழம் பகுதியை வெல்ல எண்ணிப் பாண்டியர் ஆதரவைப் பெற்றிருத்தலும், மதுரை நாயகர் இதற்கு மறைமுகத் துண்டுதலா யிருத்தலும் இயல்பு, வல்லம் வென்ற பின் அதனைத் தஞ்சை வாணனுக்கே வரதுங்க ராமன் அளித்திருக்க லாம். 'பணிந்தார்க்கு அரசளிக்கும்' என்ற வெண்பாத் தொடர் இதனைக் குறித்திருத்தல் கூடும்.

ஜம்புலமதுகுப் போர்: 1598

பெண்ணை யாற்றுப் போருக்கும் பின் கோல் கொண்டா அரசன் இதுவரை வென்ற பகுதிகளில் வேறுபல கோட்டைகளை யும் இரண்டாம் வெங்கடன் கைப்பற்றி அப்பகுதிகளில் தன் ஆட்சி நிறுவினான், இதன் பின் கோல் கொண்டா அரசன் கிருட்டிணை யாற்றையே மீண்டும் கோல்கொண்டாவுக்கும் விசயநகரத்துக்கும் எல்லையாக ஏற்று ஒப்பந்தம் செய்து கொண்டான்.

புற எதிரியாகிய கோல்கொண்டாப் பகைவனைச் சமாளித்த பின்னும் இரண்டாம் வெங்கடன் அக எதிரிகளாகிய பெருமக்களை எதிர்க்க வேண்டி யிருந்தது. கொண்ட வீடு இன்னும் கோல கொண்டாவின் கையிலேயே இருந்தது இதற்கு உகந்ததாயிற்று. ஆனால், 1589-ல் உதயகிரி விசய நகரப் பகுதியாயிற்று.கோலாற்றுப் பகுதியில் கிளர்ந்தெழுந்த திம்மய்யக் கௌடன் இதனை யடுத்துக் கீழடக்கப் பட்டான். அதன் பின்