உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

135

யாசம நாயுடுவும் தெற்கே தொண்டை மண்டலம் சோணாடு ஆகியவற்றின்மீது தாக்குதல் நடத்தினார்கள். உத்தரமேரூர்ப் போரில் கிளர்ச்சிக்காரர் பக்கம் ஆதரவு தந்த மதுரை, தஞ்சை, செஞ்சி நாயகர்களைத் தண்டிப்பதே இதன் நோக்கமாய் இருந்தது. செங்கற்பட்டுப் போர் திருச்சிராப்பள்ளிப் போர், மதுரைப் போர் ஆகிய மூன்றிலும் யாசம நாயகன் இத்தென் திசை நாயக மரபுகளை முறியடித்தான்.

செஞ்சிப் போர் : 1607-1608

இப்போரில்

பேரரசனும்

யாசம

நாயுடுவும்

கிருஷ்ணப்பனை முறியடித்துச் செஞ்சியையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். கிருஷ்ணப்ப நாயகன் இப்போரில் சிறைப் பட்டான். ஆனால், தஞ்சை ரகுநாதநாயகன் போர் நடுவில் பேரரசன் பக்கம் சேர்ந்து கொண்டதாலும் பெனுகொண்டா முற்றுகையின்போது பேரரசனுக்கு உதவி செய்ததாலும் பேரரசனிடம் செல்வாக்குப் பெற்றான். அச்செல்வாக்கைத் துணைக் கொண்டு அவன் சிறைப்பட்ட தன் நண்பன் கிருஷ்ணப்ப நாயகனின் சிறை விடுதலைகோரி அவனை விடுவித்தான்.

விசயநகர அரசுரிமைப் போராட்டம் : 1614

1618

இரண்டாம் வேங்கடனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். ஆனால், குழந்தைகள் இல்லை. அவன் மனைவியருள் ஒருத்தி கொப்பூர் ஜக்கராயன் என்ற பெரு மகனின் உடன்பிறப்பாயிருந் தாள்.மன்னன் அவளிடம் உயிர்ப்பாசம் வைத்திருந்தான். அவன் தான் பெறாத மகவைப் பெற்றதாகப் பாவித்து மற்றொருவர் பிள்ளையை எடுத்து வளர்த்தாள். அரசன் அது போலி மகவென்று தெரிந்தும் மனைவியிடம் கொண்ட பாசத்தினால் தெரியாதவன் போலிருந்தான். ஆனால், அரசுரிமைக்கு அவன் தன் அண்ணன் இராமன் மக்களுள் கன்னட மண்டல மாண்ட திருமலையின் தம்பி இரண்டாம் சீரங்கனையே (1614) உரியவனாகத் தெரிவித்து மாண்டான். ஆயினும் ஒரு மருமகன் பெயரை வைத்து அரசுரிமைச் செல்வமாளும் அவாவால் கொப்பூரி ஜக்கராயன் போலி மகவையே அரசனாக்க முனைந்து