உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

அப்பாத்துரையம் - 17

ருத்தல் கூடும். அல்லது திருவாங்கூர் அரசன் கீழ் நாஞ்சில் நாடாண்ட ஒரு வீரப் படைத் தலைவனாகவும் இருத்தல் கூடும்.

மதுரைப் படைகள் இராமநாதபுரம்வரை பெரும் போரிட்டுக் கீழடக்கிய பின்னும், சேதுபதி சடைக்க தேவன் இராமேசுவரம் தீவில் சென்று எதிர்ப்புச் செய்தான். படைகளை அத் தீவினுள்கொண்டு செல்வதற்காகப் பாம்பன் மீது ஒரு பாலம் கட்டமைக்கப்பட்டது. சேதுபதி சிறைக்கப்படுத்தப்பட்டு மதுரைக்குக் கொண்டு வரப் பட்டான்.

இப்போர் 1639-க்குள் முடிவடைந்துவிட்டது. இந்நட வடிக்கை களில் போர்ச்சுகீசியர் திருமலை நாயகனையும், டச்சுக்காரர் சேதுபதியையும் ஆதரித்துப் போரில் கலந்து கொண்டதாக அறிகிறோம். போரில் சில கட்டங்களில் இரு தரப்பாருக்கும் கடற் போர்களும் நடைபெற்றன என்று அம்மானை கூறுவதுடன், போர்ச்சுகீசிய டச்சு ஆதாரங்களும் இவற்றை வலியுறுத்துகின்றன.

போர்ச்சுகீசியக் கீழ்திசைத் தலைவனிடம் மதுரை நாயகன் இராமப் பையனையே அரசியல் தூதுவனாக அனுப்பி, போரில் போச்சுகீசிய அரசன் படைகள் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த தாகவும், போர்ச்சுகீசியருக்கு இதற்குப் பதிலீடாக ஒரு கோட்டை யும் ஏழு கோயில்களும் கட்டித் தருவதுடன், பிற உரிமைகள் அளிப்பதாகவும் உறுதி கூறினான். சேதுபதியின் மறவர் வெள்ளையரை விடச் சிறந்த வீரர் என்று டச்சு ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன.

அரசுரிமைப் போருடன் இராமநாதபுரம் அமைதி காண வில்லை. தளவாய் சேதுபதியின் மறு புதல்வர்களான இரகுநாத தேவன், நாராயண தேவன் ஆகியோர் மக்கள் துணை கொண்டு தம்பிக் கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். திருமலை நாயகன் இப்போது சேதுபதி மரபின் வாழ்வில் தன் தலையீட்டால் வந்த பிழை உயர்ந்தான். நாட்டில் அமைதி பேணவல்லவன் சேதுபதி சடைக்கனே என்றுணர்ந்து அவனையே (விடுதலை செய்து) மன்னனாக்கினான். அவன் 1640-முதல் 1645 வரை யாதொரு வில்லங்கமும் இல்லாமல் ஆண்டான். ஆனால்,1645-ல் தம்பியால் அவன் கொலை செய்யப் படவே மீண்டும் அமைதி கெட்டது.