உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

அப்பாத்துரையம் - 17

பெனு கொண்டாவின் மீது பீசப்பூரின் கண் திரும்பிற்று. அதன் பாதுகாப்பைக் கொண்டி நாயகனிடம் விட்டு விட்டுப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் வேலூருக்கு மீண்டான்.கொண்டி நாயகன் 15 ஆண்டுகள் வரை பெனுகொண்டா எதிரிகள் கையில் சிக்காமல் காத்துவந்தான்.

செஞ்சிநாயனுடன் பேரரசன் மிக நெருக்கமாகப் பழகுவது காணப் பொறாமல் மதுரை நாயகர்கள் பேரரசன் வேங்கடனுக்கு எதிராகச் சதி செய்தனர். இச்சதி வெற்றி பெறவில்லை.

இதேசமயம் எக்காரணத்தாலோ, இளவரசன் (மூன்றாம்) சீரங்கன் பீசப்பூர் அரசனுடன் சேர்ந்துகொண்டு விசய நகரத்தின் மீது இரு தடவை படையெடுத்தான்.1638-ல் நடைபெற்ற முதற் படையெடுப்பில் பங்களூர் முற்றுகையிடப்பட்டது. மூன்றாம் வேங்கடன் பெரும் பொருள் கொடுத்து இணக்க அமைதி பெற்றுக் கொண்டான். அத்துடன் தஞ்சை நாயகர்களுடன் ஒற்றுமைப் பட்டுத் தன்னைப் பலப்படுத்தக் கொண்டான்.

இளவரசன் (மூன்றாம்) சீரங்கன் 1641-ல் பீசப்பூர்ப் படைத் தலைவன் ரணதுல்லாகானுடன் படையெடுத்து வேலூருக்குப் பன்னிரண்டு கல் தொலைவரை முன்னேறி யிருந்தான். இத்தடவை தமிழக நாயகர் உதவி வேலூரைக் காத்தது. ஆயினும் இதே சமயத்தில் கோல் கொண்டா அரசனும் கீழ்கரையோர மாகப் படையெடுத்து வந்தான். சரிகின்ற பேரரசில் மேல் திசையில் பீஜப்பூர் முன்னேறுவதுடனொத்துக் கீழ்திசையில் முன்னேறி அதைப் பங்கிடவே அவன் எண்ணினான். நெல்லூர்ப் பகுதியில் அருமகோவனின் தலைவன் வேலுகோடி திம்மராயனும் பூவிருந்த வல்லியிலிருந்து சென்னைப் பகுதியை ஆண்ட தாமால் வேங்கடனும் கோல கொண்டாவை ஓரளவு எதிர்த்து நின்றாலும், அதன் முன்னேற்றத்தை அவர்கள் தடுத்து நிறுத்த முடியவில்லை. இத்தகைய நெருக்கடித் தறுவாயிலேயே பேரரசன் நம்பிக்கை யிழந்து வேலூரைக் கைவிட்டுச் சித்தூர்க் காடுகளிடையே திரிந்து மனமுறிவால் மாண்டான்.