உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

அப்பாத்துரையம் - 17

செயலில் முனைந்தது. முஸ்லிம் படையின் எதிர்ப்புக் கென்று ஏற்பாடுகள் செய்தது. வேண்டுமென்றே போரை நீட்டி, எதிரி படைத் தலை வரிடமிருந்து கைக்கூலி பெற்று மக்களை அவர்கள் ஏய்த்து வாழ்ந்தனர்.சொக்கநாதன் இதையறிந்து மேலெழுத்தைக் கொன்றும், அமைச்சர் கண்கெடுத்தும் குழுவைச் செயலற்ற தாக்கினான். சில நாட்களில் படைத் தலைவனையும் நீக்கித் தானே படைத் தலைவனானான்.

இச்சமயம் தஞ்சை அரசனாயிருந்த விசயராகவ நாயகன் வீரனானாலும், அரசயலில் கருத்துச் செலுத்தாத பக்தி வெறியனாய் இருந்தான். அவன் செயலால் மதுரைக்கு நேர்ந்த டரை விட அவன் நாட்டுக்கு நேர்ந்த இடரே மிகுதி. ஆயினும் அவனைத் தண்டிக்கும் நோக்கத்துடன், சொக்கநாதன் 70,000 படைவீரருடன் படையெடுத்துத் தஞ்சையைப் பணியவைத்தான்.

1663-ல் பேர் போன பீசப்பூர்ப் படைத்தலைவனான வானாமி யான் படையெடுத்துப் பெருந் தொல்லைகள் விளைவித்தான். சொக்கநாதன் வீரப் பாதுகாப்பில் திருச்சிராப்பள்ளியை அவன் தாக்க முடியவில்லை யானாலும், சூழ்புல அழிவு காக்கும் படி அவன் ஒரு பெருந்தொகை அளித்து அனுப்பப்பட்டான்.

இத்தடவையும் பகைவனுக்குதவிய ‘பக்த’ விசயராகவனைத் தண்டிக்கப் புறப்பட்டுச் சொக்கநாத நாயகன் வல்லத்தைக் கைக் கொண்டு அங்கே தன்படைகளைக் காவலில் வைத்துவிட்டு வந்தான். வல்லம் சில காலத்துக்குள் தஞ்சையால் மீட்கப்பட்டது.

சேது நாட்டுப் போர் : 1665

முஸ்லிம் படையெழுச்சியின் போது தனக்கு உதவாத தற்காகத் திருமலை சேதுபதியைச் சொக்கநாத நாயகன் தண்டிக்க எண்ணித் திருப்பத்தூர், புதுக்கோட்டை, மானாமதுரை, காளை யார் கோயில் ஆகிய கோட்டைகளைக் கைக்கொண்டான். ஆனால், குரங்குப் போர் முறையைப் பின்பற்றிப் பின் வாங்கி ஒதுங்கிய சேதுபதி, சொக்கநாதன் முதுகு திரும்பியதே அவற்றைக் கைப் பற்றிக் கெண்டான்.