உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

(171

திருவாங்கூர் அரசனைப் பல இடங்களில் முறியடித்த பின்னர் திறைப் பாக்கி முழுவதும் மீட்டதுடன் விலையுயர்ந்த பரிசுப் பொருள்களும் பெற்றுத் திரும்பினான்.

கதலி மலைப்போர்: ராஜாதேசிங்கின் வீர காதை : 1714

தமிழக நாட்டுப் பாடல்களில் பாஞ்சாலங் குறிச்சி வீரகாதை யுடன் இணையாகக் கூறக்கூடிய புகழ்க்காதை ராஜாதேசிங்கின் வீறாப்புமிக்கப் போராட்டமே; வரலாற்று நோக்கிலும் அதன் எழுச்சி குறைந்தென்று கூறமுடியாது. ஏனென்றால் அது நடை பெற்ற காலத்திலேயே அது எதிரிகள் கூடாரத்தையும் ஆட்கொண்டு வீர வணக்க மரபை ஏற்படுத்திவிட்டதென்று உணருகிறோம்.

தேசிங்கு என்ற தமிழ் மக்கள் மரபு வழக்குக்கு மூலமான பெயர் தேஜ்சில் என்பதாகும். அவன் ஓராண்டுக்குள் நிகழ்த்திய வீரகாவிய நிகழ்ச்சி பற்றி நமக்கு இரண்டு வரன் முறை மரபுகள் கிடைத்துள்ளன. ஒன்று தேசிங்கை தெய்வீக வீரனாக்கி தமிழ் நாட்டுப் பாடல், மற்றொன்று பிரிட்டிஷ் ஆட்சித் தொடக்க காலத்தில் நாராயணப் பிள்ளை என்னும் வரலாற்றாசிரியன் இயற்றிய கர்நாடக ராசாக்கள் சரித்திரம் தருவது. பிந்தியது வீர வணக்க உணர்ச்சியற்ற தேசிங்கின்வீரச் செயலையே பாராட்டாத வரலாறானாலும் வீர வெற்றியை எடுத்துக்காட்ட அதுவே போதியது.

இரு மரபுகளுக்குமிடையே சிறு வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. தமிழ்ப் பாடல் தேசிங்கின் தந்தை தேரணிசிங்கு என்றும், உடன் பிறந்தான் தரணிசிங்கு என்றும் கூறுகிறது. அவன் செஞ்சியிலேயே பிறந்து தந்தை இறக்கும் போதும் செஞ்சியிலேயே இருந்ததாகக் கூறுகிறது. ஆனால், தமிழ் வரலாற்றேடும் நாமறிந்த வரை பிற வரலாற்றாதாரங்களும் அவன் தந்தை 1700 முதல் 1714 வரை செஞ்சியாண்ட சரூப்சிங்கு என்றும், தந்தை இறந்தபோதும் அவன் தன் தாயகமாகிய புண்டேல் கண்டில் இருந்தானென்றுமே கூறுகின்றன. தவிர நாட்டுப் பாடல் அவன் தந்தை தில்லிப் பேரரசனால் திறை கொடாததற்காகச் சிறைப் பட்டிருந்தா னென்றும், பேரரசனிடமிருந்த அடக்க முடியாத குதிரையை