(186
அப்பாத்துரையம் - 17
பதேசா கிபையே தலைவனாக்கியிருந்தான். படைகளைத் திரட்டிக் கொண்டு தன் உதவிக்கு வரும்படி சந்தாசாகிப் அவனுக்கு அவசரச் செய்தியனுப்பினான். ஆனால், இருவர் படைகளையும் கொடுத் தலத்தருகில் மராத்தியப் படைகள் எதிர்த்துத் தாக்கி முறியடித்தன. சந்தாசாகிப் மராத்தியப் படைத்தலைவன் ரகோஜி பான்ஸ்லேயிடம் சிறைப்பட்டான்.தம் தமிழக நண்பன் சஃவ்தர் அலிக்கு அவனால் போட்டி ஏற்படாத வண்ணம் அவனை மராத்தியர் தம் மண்டலத் திலேயுள்ள பூனாவுக்கே கொண்டு சென்று சிறை வைத்தனர்.
திருச்சிராப்பள்ளியின் ஆட்சிப் பொறுப்பு ஊட்டியிலிருந் தாண்டுவந்த மராத்தியத் தலைவன் முராரி ராவிடம் ஒப்படைக் கப்பட்டது. மதுரைநாயக மரபின் ஆட்சியிலிருந்த திருச்சிராப் பள்ளி இங்ஙனம் சந்தாசாகிப் ஆட்சிக்கு மாறி அதன் பின் மராட்டிய ஆட்சிக்கு உட்பட்டது.
ஆம்பூர்ப் போர்: 1749
கருநாடக நவாபான சஃவ்தர் அலி (1740 - 1742) ஆட்சிக்குப் பின் அவன் மகன் முகமது சயீறு (1743 -1744) ஆட்சியுடன் சாதத் உல்லாகானின் முதல் கருநாடக நவாப் மரபு முடிவுற்றது. புதிய மரபு முதல்வனாக நவாப் சிராஜ் உத்தௌலா முகமது அன்வருதீன் (1741-1749) ஆட்சியுரிமை ஏற்றான்.
தே சமயத்தில் முதல் நிஜாம் ஆன நிஜாம் உல்முல்க் அசஃவ்ஜா 1748-ல் உலக வாழ்வு நீத்தான்.
நிஜாம் உல்முல்க் அசஃவ் ஜாவின் புதல்வன் நசீர்ஜங் 1741-ல் தன் தந்தைக் கெதிராகக் கிளர்ச்சி செய்திருந்தான். அச்சமயம் அசஃவ் ஜாவில் மருமகனான மோலேர் மாகாணத் தலைவன் முதவாசில்கான் அவனுக்குப் பேருதவி செய்திருந்தான். இதற்குக் கைமாறாகக் கருநாடக நவாப் ஆட்சிப் பகுதியைத் தனக்கு அளிப்பதாக அசஃவ்ஜா வாக்களித்திருந்தான் என்று முதவாசில் கான் உரிமை கோரினான். அதைப் பெறும் படி தன் மைந்தன் முசபர் ஜங்கை 20, 000 குதிரை வீரருடனும், 50,000 காலாட்படை வீரருடனும் தமிழகத்துக்கு அனுப்பினான். அவனுக்குத் துணை யாக தமிழக அனுபவமிக்க சந்தா