தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2
(191
பெறாமலுமே இருந்தனர். மகமதலி தன் சார்பிலும் நசீர் ஜங்கின் சார்பிலும் உதவி கோரியும் பிரிட்டிஷார் அவனுக்கு மட்டுமே சிறிதளவு உதவியளித்து, நசீர் ஜங்குடன் நேரடி உறவு கொள்ளாமலுமே இருந்தனர். நசீர் ஜங்கும் பெரும் படையுடனே மெல்ல நகர்ந்தானேயன்றி எத்தகைய செயலும் ஆற்றவில்லை.
தொடக்கத்திலேயே நசீர் செஞ்சியையும் திருவாதியையும் கைப்பற்றிக் கொண்டு விழுப்புரத்தருகே தாவளமிட்டிருந்தான். ஆனால், செஞ்சியும் திருவாதியும் பிரஞ்சுக்காரர் கைப்பட்ட தென்று கேட்ட பின்பே அவன் போரில் முனைந்தான். அத்துடன் பிரஞ்சுக் காரர் செல்வாக்கு தென்னக அரசுகளிடையே எல்லையற்று வளர்வது கண்டு பிரிட்டிஷாரும் ஓரளவு மனமாற்ற மடைந்து வந்தனர். நசீர் ஜங்கின்படைப் பெருங்கடலின் அளவு கண்டும், அவன் தங்களுக்குக் கரையோர உரிமைகள் வழங்குவதாக ஒத்துக் கொண்ட பின்பும், அவர்கள் ஆதரவு ஆர்வ ஆதரவாகப் பெரு கிற்று. அதன் பின்னரே அவர்கள் இணக்கம் பெற்று முகமதலி 6000 குதிரை வீரருடன் நசீர் ஜங்கின் படையுடன் வந்து கலந்து கொண்டான்.
படையணிகள்
விழுப்புரத்துக்கும்
ம்
நசீர்ஜங்கின் கோலியனூருக் கும் இடையே தென்வடல் நீளம் 5 கல்லாகவும், கிழக்கு மேற்கு அகலம் மூன்றுகல்லாகவும், சுற்றளவு 28 கல்லாகவும் ஆரவாரிக்கும். வீரமா கடலாகப் பரந்திருந்த தென்று அறிகிறோம், அதில் மூன்று இலட்சம் படைவீரரும், குதிரை வீரரும், 1300 யானைகளும், 800 பிரங்கிகளும் இருந்தன. தென்னகம் அணிடைக் காலங்களில் கண்டிராத அம் மாபெரும் படை கண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷார் மலைப்பெய்தின ரென்றும் ‘ஆ, இதுவா தென்னகத்துச் சுபேதாரின் பதவி மதிப்பு' என்று வியப்பார்வ முற்றதாகவும் அறிகிறோம். ஆனால், அளவின் பெருமை வீரத்தின் பெருமையோ, திறமையின் வலிமையோ ஆகாதென்பதைப் போர்களின் போக்குக் காட்டிற்று.
தொடக்ககாலச் சில்லறை நடவடிக்கைகளிலேயே இக்கடற் பெரும்படையின் அளவு பெரிதும் கரையலாயிற்று. புத்தனந்தல் போருக்குமுன் 60,000 காலாள், 45,000 குதிரை வீரர், 700 யானைகள், 360 பீரங்கிகள் என்ற அளவில் அது குறைந்து விட்டது.