உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

211

ஆகிய இரு சாராரையும் நேசமாக நடத்த விரும்பினான். வெள்ளையர் ஆட்சியை விரும்பாமல் வெள்ளையரை மட்டும் அவன் விரும்பி நேசித்ததன் மறைதிறவு இதுவே.

ஹைதரைப் போலவே திப்புவும் சிறந்த வீரன், படைத் தலைவன். ஆட்சித் திறமையிலும் அரசியல் சூழ்ச்சிகளிலும் தேசிய ஆர்வத்திலும் அவன் ஹைதரைவிடக் குறைந்தவனல்லன். ஆனால், ஹைதரின் கடுவாழ்வின் பயிற்சி அவனிடம் இல்லை. இதனால் சுற்றிலும் உள்ளவரை உள்ளவாறு மதிப்பிடும் பண்பும் அவர்களைப் பயன்படுத்தினாலும் அவர்கள் வசமாய் விடாமல் அவர்களை அடக்கியாளும் பண்பும் அவனிடம் ஹைதரளவு இல்லை. பிரிட்டிஷார் தன்னை எதிர்த்தாலும் கூடிய மட்டும் அவர்களை எதிர்ப்பதில் தன் வலிமையைச் சீரழிக்காமல் காத்துக் காலம் கருதியிருந்தவன் ஹைதர். திப்பு சிறிது ஆத்திர அவசரம் காட்டிப் பிரிட்டிஷார் விரித்த வலைக்குள் விழநேர்ந்தது.

ன்

ஹைதர் - திப்பு எழுச்சி சில வகையில் குடிமன்னர் நிகழ்த் திய தென்னகத்தின் - மாநிலத்தின் - முதல் தேசீயப் போராட்டம் ஆகும். இதில் அவர்கள் முழுவெற்றி கண்டு விடவில்லை. இதற்கு மேற் குறிப்பிட்ட திப்புவின் குறைபாடுகள் மட்டும் காரணமல்ல. ஹைதர் -திப்பு இருவருமே படைவீரரிடம் காட்டிய அதே அன்பை நாட்டு மக்களிடம் காட்ட முடியாது போயிற்று. அத்துடன் தன் ஆட்சிக்கு வெளியேயுள்ள மக்கள் -சிறப்பாக மலபார், குடகுப் பகுதி மக்கள் - ஆதரவைப் பெறுவதிலும் அவர்கள் அருமை வாய்ந்த போர் முறைகள், ஆட்சி முறைகள் குந்தகமாயிருந்தன. இது முற்றிலும் அவர்கள் குறையன்று - அவர்கள் காலநிலையின், 16-முதல் 18-ஆம் நூற்றாண்டுவரை இருந்த தென்னக அரசியல் சூழலின் குறையே அது. மக்களைக் காள்ளை யடிப்பதே அந்நாள் போர்முறையாகவும் வெற்றிகண்ட அரசர் புதுவெற்றிகளை உறுதிப்படுத்தும் முறை யாகவும் இருந்தது.

து

இக்குறைபாடுகள் பேரரசின் வலுவை மட்டுமே குறைத்தன. தென்னகத்துக்குத் தேசிய வாழ்வின் வீழ்ச்சியை, மேலை வெள்ளை யரின் அயலாட்சியை -அளித்த பண்பு இதுவல்ல. ஹைதர் திப்புவின் தேசிய போராட்டங்களுக்கும் தேசிய ஆட்சியியல்புக்கும் முற்றிலும் மாறான அடிமைப் பண்புகளும்