தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2
215
பிரிட்டிஷார் நிகழ்த்த வேண்டி வந்த தேசியப் பெரும்போர் மைசூர்ப் போர் ஒன்றேயாகும். அதன்பின் அவர்கள் சரிசமப் போராட்டம் எதுவும் இல்லாமலேயே கீழ் திசையில் பரவ முடிந்தது.
தமிழ்த் தேசியமும் பிரிட்டிஷாட்சியும்
தென்னகத்துக்குப் பிரிட்டிஷ் ஆட்சியாளர் கொடுத்த தொடக்கக் கால முக்கியத்துவத்தையும், பிற்காலத்தில் அதை வடதிசைப் பரப்புக்குக் கொண்டு சென்றதையும் தென்னகத்தேசிய வரலாற்றா சிரியர்கள் மட்டுமன்றி, கீழ்திசைத் தேசிய வரலாற்றாசிரியர்களும் நுணுகிக் கவனித்தல் வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சியில் கீழ்த்திசையில் முதல் முதல் அமைந்த மாகாண ஆட்சி சென்னை மாநில ஆட்சியே. 1653-ல் இது அமைக்கப் பட்ட பின்பே,1698-ல் வங்கத்தில் வங்க மாநில ஆட்சி ஏற்பட்டது. ஆனால், சென்னையே கீழ்த்திசைத் தலைமை ஆட்சியிடமாய் இருந்தது. வங்கம் சென்னையைத் தலைமை மாகாணமாகக் கொண்டு அதன் கீழ்ப்பட்ட ஒரு சிறு ஆட்சிப் பகுதியாகவே இருந்தது. வங்கம் ஒரு மாகாணமாக அமைக்கப் பட்டது 1701-லேயேயாகும். கல்கத்தா இந்தியாவின் தலைநகர மானது 1784 முதலேயாகும்.1910-ல் விக்டோரியா அரசி-பேரரசி ஆட்சிமுடிந்து ஏழாம் எட்வர்டு அரசர் பேரரசர் ஆன சமயத்திலேயே இந்திய மாநிலத் தலைநகரம் வட இந்தியாவின் அயலாட்சித் தலைநகரமாகிய தில்லிக்கு இறுதியாக மாற்றப்பட்டது.
கடலக அரசாகிய பிரிட்டன் கீழ்திசைத் தலைமை யாட்சியைக் கடற்கரை நகரங்களிலிருந்து உள் நாட்டுக்கும், கடற்கரைப் பகுதியான தென்னாட்டிலிருந்து நிலப் பெரும்பரப்பான வட திசைக்கும் கொண்டு சென்றது பற்றி ஆராய்ச்சியாளர் இதுவரை சிந்தித்தது கிடையாது. ஆனால், தென்னகத் தேசிய வாதிகள் இதில் கருத்துச் செலுத்துவது பயன் தரத்தக்கதாகும். பிரிட்டன் கடல் வல்லரசான பின்பும் கீழ்திசையில் பிரிட்டன் ஆண்ட பகுதிகள் கடலக வாழ்வின் தொடர்பற்றதாய் இருப்பதையே பிரிட்டிஷ் ஆட்சியாளர் விரும்பினர். தென்னகத்தின் கடல்வாணிக, தொழில் மரபுகள்