உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




218

|| - -

அப்பாத்துரையம் - 17

உடன்படிக்கை ஏற்பட்டது. இரண்டு நாட்டு வாணிக ஆட்சியினரும் அரசியல் சூழல்களில் சிலகாலம் தலையிட மாட்டார்கள் என்ற நிலையுணர்ந்த புதிய நிஜாம் அரசன் இவ்வாண்டிலேயே தன் தமையனைக் கொலை செய்து தன் ஆட்சியை வலுப்படுத்திக் கொண்டான். அதன் பின் அவன் மராத்தியர் அரசியலில் தலையிட்டு மராத்திய மைய ஆட்சியிலிருந்து. பேரரசை ஆண்ட ஜானோஜி பான்ஸ்லேயைப் பிரித்துத் தன் வயப்படுத்தினான். இதன் பின் அவன் உதவியுடன் மராத்தியர் மீது போர் தொடுத்தான்.

தண்டுல்சாவில் நடைபெற்ற போரில் நிஜாமுக்கு அவன் எதிர் பார்த்த வெற்றி கிட்டவில்லை. ஏனெனில் ஜானோஜீ போரின் முக்கிய கட்டத்தில் மறுபடியும் திசைமாறினான். அத்துடன் நிஜாம் அலியின் திறமை வாய்ந்த அமைச்சனாகிய ராஜா பிரதாப் வந்த் என்ற விட்டல் சுந்தர் இப்போரில் மாள நேர்ந்தது.

முதல் மைசூர்ப் போராட்டம் : 1767 - 1769

தேசிய நோக்கமோ அரசியல் வாய்மையோ அற்ற, மற்றத் தென்னக அரசுகளை நம்புவதை விட வணிகராக வந்து கரையோரப் பகுதிகளில் பரவிய பிரஞ்சு, பிரிட்டிஷ் ஆட்சித் தலைவர்களை நம்புவது பயன் தருவது என்பதே ஹைதரின் நிலையான கோட்பாடு. ஆனால், ஆர்க்காட்டு நவாப்பாகிய முகம்மது அலி பிரிட்டிஷ் ஆட்சியாளரைத் தன் வயப்படுத்தி ஹைதருக் கெதிராக அவர்களை ஏவிக் கொண்டே இருந்தான். அவனுக்கு கன்னட வீரனாகிய ஹைதரின் வளர்ச்சிகண்டு அச்சமும் கிலியும் பொறாமையும் மிகுதியாக இருந்தன. இதே நிலை நிஜாமுக்கும் இருந்ததானாலும், அவன் மராத்தியர் வளர்ச்சி கண்டும் அஞ்சினான். ஆகவே ஹைதரை ஆர்க்காட்டு நவாப்மீதும் சென்னை பிரிட்டிஷரார் மீதும் திருப்பி விட்டுத் தன்னை வலுப்படுத்தினான்.

நிஜாம், மராத்தியர், மைசூர் மூன்றும் ஒன்றுபடா வண்ணம் காப்பது பிரிட்டிஷாருக்கு இச்சமய அரசியல் தந்திரமாய் இருந்தது.1765-ல் அவர்கள் நிஜாமுடன் உடன் படிக்கை செய்து, ஹைதரிடமிருந்தும் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி