உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

ரு

7

"சோழப் பெரும் பேரரசுருள் முதல்வனான முதலாம் இராசஇராசன் காலத்தில் கடாரப் பேரரசன் அவனோ டொப்பான ஒரு கடல்கடந்த பேரரசை ஆண்டவன், ஜமாலுதீனைப்போல அவன் ஒரு வணிகக் கோமகனல்லன். அவன் சோழப் பேரரசின் கடற்கரை நகரங்களில் ஒன்றான நாகப் பட்டினத்தில் ஒரு புத்தப் பள்ளி கட்டவும், அதற்குத் தன் செலவிலேயே சில ஊர்களை விலைக்கு வாங்கி மானியம் விடவும் விரும்பினான். இவை அரசியல் பெருஞ் செயல்களல்ல, சமயச் சிறு செயல்களே. ஆயினும் இச்சிறு செயல் உரிமைகளுக்குக் கூட அவன் சோழப் பெரும் பேரரசனின் வெளி நாட்டமைச்சனை அணுகி, அவன் மூலமாகப் பெரும் பேரரசன் இணக்கம் பெற்றே செயலாற்ற முடிந்தது! (கடாரப்பேரரசன் சோழப் பெரும் பேரரசுக்கு அடங்கி வாழ நேர்ந்தது. இதன் பின்னரேயாகும் என்பது கவனிக்கத் தக்கது)”

மதுரை நாயகர் வரலாறு; திரு. ஆர். சத்தியநாத ஐயர்; முனைவர் பேராசிரியர் கிருஷ்ணசாமி ஐய்யங்கார் அவர் களின் பதிப்புரை அடிக் குறிப்பு பக்கம் 90.

பிற்காலப் பாண்டியப் பேரரசர் ஆட்சியில் அராபியர் கரையாட்சி யில் பங்கு கொண்டனரென்றால் -விசய நகர, மதுரை நாயகர் ஆட்சியில் கடற்கரைகள் முற்றிலும் போர்ச்சுக்கீ சியர் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஏகபோக உரிமை வாய்ந்த வேட்டைக் களங்களாய் விட்டன.

ஹைதர், திப்பு, ஆகிய இரு மைசூர் பேரரசர், பாஞ்சாலங் குறிச்சிக் கட்டப் பொம்மன் ஆகியோர் நீங்கலாக ஏனைய தென்திசை, வட திசை அரசர், பேரரசர் யாவரும் பிற்காலத்தில் கடலாட்சி, கரையாட்சிகளை மட்டுமன்றிக் கீழ்திசை வாழ்வையே தம் குறுகிய தன்னலப் போட்டிப் பூசல்களால் கோட்டை விட்டவராவர். வருங்காலத் தென்னாட்டு வரலாறும் இந்திய வரலாறும் இம் மூவரசரையும் சிவாஜியையும் மட்டுமே வருங்காலக் கீழ்திசை மறுமலர்ச்சி வாழ்வுக்குரிய மூதாதையர்களாகக் கொள்ளல் தகும். அவர்கள் பண்புகளே தேசியப் புது மலர்ச்சிக்குரிய கரு மூல விதைகளாகும்.

ம்