தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2
1227
அறிகிறோம். நல்ல காலமாக நாட்டு மக்கள் அச்சமயம் காட்டிய எதிர்ப்பு இத்திட்டத்தைத் தகர்த்தது.
சிதம்பரம் போர்: 1781 (ஜூன் 18)
ஹைதர் திருச்சிராப்பள்ளியை நீண்ட நாள் முற்றுகை யிட்டிருந்தான். திருச்சிராப்பள்ளியே அந்நாளில் தென் தமிழகத்தின் வாயில் கதவாயிருந்தது. அது கிட்டத் தட்ட விழும் நிலையை அடைந் திருந்தது. அதை ஹைதர் அன்று கைப் பற்றியிருந்தால், மைசூரின் வரலாறும், தென்னக வரலாறும் வேறு வகையாய் அமைந் திருக்கும். ஏனெனில் திருச்சிராப்பள்ளி கடந்து அன்று ஆர்க்காட்டு நவாபின் கையோ பிரிட்டிஷ் வாணிக ஆட்சியாளர் ஆற்றலோ சென்றதில்லை. தென் தமிழகத்தின் பிடி அச்சமயம் ஹைதரை வெற்றிகரமான தேசியப்போர் தளபதி யாக்கியிருக்கும். ஆனால், சர் அயர்கூட்டை வென்றடக்கும் ஆர்வம் அவனைச் சிதம்பரத்துக்கு இட்டுச் சென்றது. சர் அயர் கூட்மூர்க்கமாகப் போர் ஆற்றினான்.
இப்போரில் கோயிலே கோட்டையாய் உதவிற்று. முதல் இரண்டு வாசல்களைப் பிரிட்டிஷார் கடந்தனர். ஆயினும், மூன்றாவது வாசல் கதவுமணல் குவியல்களால் பின்னால் வலுப்படுத்தப்பட்டிருந்தது. கூட்டின் படையில் ஏற்பட்ட வெடி விபத்து ஒன்று அவன் இரண்டாம் வாயிலில் அடைந்த தோல்வியைப் பெரிதாக்கி அவனைக் குலைந்தோடச் செய்தது.
புத்தந்துறை (போர்ட்டோ நோவா) போர் : 1781 (ஜூலை1)
புத்தந்துறையருகில் ஹைதர் எட்டுத்தடவை பிரிட்டிஷ் படைகளைத் தாக்கியும் இறுதியில் அவன் படைகள் கலைந்து வெருண்டோடின. தோல்வியை ஏற்கவிரும்பாமல் களத்திலேயே நின்ற வீரமன்னனை அவன் படைத்தலைவர்களே குதிரை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. இப்போரில் ஹைதரின் படையழிவு 10,000 க்கு மேற்பட்ட தென்று கூறப்படுகிறது.