(236
அப்பாத்துரையம் - 17
ரேய்மண்டின் உதவிக்கு நிஜாம் அவனைப் பாராட்டி அவனுக் குக் கடப்பையைப் பரிசளிக்க முன்வந்தான். ஆனால், போரில் தாம் உதவாததனால் பிரஞ்சு ஆதிக்கம் வளரவிட்ட பிழை இப்போது பிரிட்டிஷாரை உறுத்திற்று.
உ
நிஜாமின் புதல்வன் அலிஜா இச்சமயம் பார்த்துக்கிளர்ச்சி தொடங்கினான். திப்பு அவனுக்கு உதவ வாக்களித்தான்.நிஜாம் மீண்டும் பிரிட்டிஷாரையும், ரேய்மண்டையும் உதவிக்கழைத் தான். பிரிட்டிஷார் உதவியனுப்பினர். ஆனால், அது வந்து சேருமுன் மீண்டும் ரேய்மண்ட் உதவியால் நிஜாம் கிளர்ச்சியை அடக்கி விட்டான். ஆயினும் அச்சமயத்தை நழுவவிடாமல் பிரிட்டிஷார் நேச ஒப்பந்தம் செய்து சமயத்தில் உதவிய வீர ரேய்மண்டின் உரிமைப் பரிசையும் தட்டிப் பறித்தனர்.
நான்காம் மைசூர்ப் போராட்டம்: 1799
கீழ்த்திசையில் தென்னகத்தை ஒரு வலிமைவாய்ந்த பேர ரசாக்கக் கனவு கண்டவன் ஹைதர், ஆனால்; அது அவன் தொலை அரசியல் நோக்கமாக மட்டுமே இருந்தது. அவன் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. திப்பு அதே போராட்டத்தை ஆத்திரப் பட்டுப் பறைசாற்றினான். இதனால் விழிப்புற்ற பிரிட்டிஷ் அரசியல் விரைந்து அவனை அழித்துக் கீழ்த்திசையை உடனடியாகக் கைக் கொண்டு வளர எண்ணிற்று.
மேற்கே அமெரிக்க குடியேற்றங்களின் மேலாட்சியைப் பிரிட்டன் இச்சமயம் இழந்ததும், ஸர் ஜான்ஷோர் வாணிகக் கோட்பாடு முறிவுற்றதும் இவ்வெண்ணத்தை வளர்த்தன. ஐரோப் பாவைத் தன் காலடியிலிட்டு ஆட்டிவந்த நெப்போலியன் எழுச்சி யும் கீழ்த்திசையில் அதே வகை ஆதிக்கத்தை நிறுவிவிடும் துடிப்பைப் பிரிட்டிஷாருக்குத் தந்தது.
தென்னக அரசுகளின் ஏலாமடமைகளையும் பிற்போக்கு களையும் கண்ட திப்பு அரேபியா, காபூல், கான்ஸ்டாண்டி னோபிள் ஆகிய கீழ்த்திசை முஸ்லிம் ஆட்சியாளர்களுக்குத் தூதர் அனுப்பி அவர்கள் ஆதரவைப் பெறத் தொடங்கினான். அத்துடன் 1715-லிருந்து பிரஞ்சுக்காரர் கைவசமிருந்த மோரிஸ் தீவின் ஆட்சியாளருக்கும் தூதனுப்பி, பிரிட்டிஷ் கடற்படையை எதிர்க்க வல்ல ஒரு பெருங்கடற்படையை அனுப்பும்படியும்,