உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

241

நாகரிக, வாணிகத் தொடர்புகள் கொண்டிருந்தனர். ஆனால், வடதிசைத் தொடர்புகளைப் போல இவை இப்பகுதியின் தேசிய வாழ்வை ஒரு சிறிதும் குலைக்க வில்லை. ஏனெனில் இவை வடதிசைப் பண்படாத தேசியக் கலவையுடன் தொடர்பற்றவை.

தென் தமிழகத்தின் தேசியப் புதுமலர்ச்சி, மைசூர் எழுச்சி கடந்து நீடித்துத் தழைத்ததாயினும், அது திப்புவுக்கு முன்னும், ஹைதருக்கு முன்னும் தொடங்கிவிட்டது என்னலாம். அது 1750- லிருந்தே திருநெல்வேலி மாவட்டத்தின் மேலைச்சீமையில் புலித்தேவர் தலைமையில் நெல்கட்டுஞ் செவ்வலில் முகிழ்த்து, மைசூர் ஆட்சியை ஹைதர் கைப்பற்று முன்பே அவனுடன் தொடர்பு நாடிற்று. பின் அவ்வெழுச்சி இராமநாதபுரத்தில் படர்ந்து,சிவகங்கையில் 1772 முதல் கொழுந்து விட்டெரிந்து,1790- க்குப் பின் பாஞ்சாலங்குறிச்சியில் புயல்வேகத்தில் வீசி ஆர்ப்பரித் தெழுந்தது. அதன் இறுதிக் கொழுங்கனல் 19-ஆம் நூற்றாண்டின் முதலிரண்டு ஆண்டுகளில் பாஞ்சாலங்குறிச்சியையும் சிவகங்கையையும் உட்கொண்டு மீண்டும் தென் தமிழகமெங்கும் அழன்றெரிந்து புறமடங்கிற்று. ஆனால், தென் தமிழகத்தில் அடங்கிய தீ அடுத்த ஐம்பது ஆண்டுகளில் தென்னகமெங்கும் பரவி இந்திய மாநில மெங்கும் விடுதலைப் பேரியக்கங்களை வளர்த்தது.

பிரிட்டிஷ் வாணிக ஆட்சியும் ஆர்க்காட்டு நவாப் ஆட்சியும் பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவுரை திருச்சிராப் பள்ளி கடந்து தென்திசை வரவில்லை. ஹைதர் திருச்சிராப் பள்ளியைக் கைப்பற்றி யிருந்தாலோ, அல்லது ஹைதரும் திப்புவும் தென்னகப் பாளையக்ககாரருக்குச் சரிசம அடிப்படையிலே தேசிய ஆதரவு தர முன்வந் திருந்தாலோ அது என்றும் தென் தமிழகத்திலும் படர்ந்திராது, கீழ்திசையிலும் நிலைத் திருக்காது என்றே கூறலாம். இப்பகுதிக்கு அத்தகைய தேசிய முக்கியத்துவம் உண்டு என்பதை இரு செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன.ஒன்று- பிரிட்டிஷாரே 1760 -ல் இப்பகுதியை பிடித்தடக்குவதைவிட, ஹைதருக்கெதிராக உதவ வேண்டுமென்ற கட்டுப்பாட்டுடன், டச்சுக்காரரிடம் பேரம் செய்து அவர்களுக்கே கொடுத்து விடலாமா என்று நினைத்திருந்தனர் என்பது, இச்சமயம் டச்சுக்காரருடன் போர் தொடங்கியதனாலேயே இந்த