தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2
L
(255
கட்டபொம்மனுக்குப்பின் அரசனாக வேண்டிய அவர் மூத்த இளவல் சிவத்தையா குமாரசாமி இப்போர்க்களத்திலே மாண் டான். ஊமைத்துரையே மரபுரிமையாக வந்த போராட்டச் செல்வத்தின் பொறுப்பேற்றான். காயம் ஒரு சிறிது ஆறியதே அவன் மீண்டும் களம் விரைந்தான்.
மருது காவியம்: 1801 (மே 28 -அக்டோபர் 1)
ஊமைத்துரை நேரே மருது வீரரிடம் சென்றான். புகழ் மாள் வின் தூதுவனாக, புகழ்த் தெய்வமாக வந்த அவனைப் புகழ் வீரர் இருகை அளாவி வரவேற்று அவனுடன் புகழ் மாளப் புறப்பட்டனர்.
போர்க்களம், திருநெல்வேலிச் சீமையிலிருந்து சிவகங்கைச் சீமைக்குமாறிற்று. அவர்களிடம் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட போர்வீரர் இருந்தனர். பத்தொன்பதாண்டுகள் ஆண்டு, மக்கள் உள்ளத்திலே அவர்கள் தேசிய வாழ்வின் நல்லார்வம் பரப்பி யிருந்தனர். ஆகவே அவர்கள் போராட்டம் பாஞ்சாலங் குறிச்சிப் போராட்டத்துக்கே ஒரு மணிமகுடமாய் அமைந்தது. மண்டியிட்டு மாற்றார் உரிமையின் கீழ் நல்வாழ்வே வாழ்வதிலும், பாஞ்சைப் புகழ்ப் பயிரைச் சிவகெங்கையிலும் பன்மடங்கு வளம்பெறப் பெருக்குவதே வள்ளுவர் மரபுக்குரிய மாண்பெனக்கொண்டு அவர்கள் களம் பல சூழ்ந்து போராடினர்.
கமுதி - கானப் பேரெயில் என்ற பெயருடன் சங்ககாலப் புகழ்கண்ட காளையார் கோயில், சிறுவயல் ஆகிய வீரக்களங் களில் வெள்ளையருடன் வீறார்ந்து போரிட்ட வண்ணம் அவர்கள் தியாக உலா ஆற்றி, வீரத்தெய்வத்துக்குப் பலிகள் பல தந்து, இறுதியில் எதிரிகள் கைப்பட்டனர்.
மருதுத் துணைவர்கள் தாம் ஆண்ட நிலத்திலேயே திருப் பத்தூர்க் கோட்டையருகில் தூக்கிலிடப்பட்டனர்.
உலகாளப் பிறந்த ஊமைத்துரை பாஞ்சாலங் குறிச்சியின் புதிய கோட்டையைத் தகர்த்த பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்த மேட் டியிலேயே தூக்கிலிடப்பட்டான்.