258
அப்பாத்துரையம் - 17
1857 -ல் சிந்து கங்கைப் பெருவெளி முழுவதும் புரட்சி கிளர்ந் தெழுந்து பெரிய எரிமலையாக எரிந்து வெடித்தது. பிரிட்டிஷ் ஆட்சியையே ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் அளவில் இது கோரமாய் இருந்தது. ஆனால், 1858-க்குள் இது பெரும் போரிட்டு அடக்கப்பட்டது.
தெற்கே பாஞ்சாலங் குறிச்சி மைசூர்ப் போராட்டங்களில் காட்டிக் கொடுத்தவர்களும் அதில் ஒதுங்கி யிருந்தவர்களுமே புதிய நாட்டரசரும் புதிய ஆட்சி வகுப்பினரும் ஆக்கப் பட்டது போல, வடதிசையிலும் புது மரபுகள் சூழப்பட்டன.
ய
இத்தனையையும் மீறிப் புரட்சிச் சங்கங்கள் எங்கும் கிளர்ந்
தெழுந்தன.
மாநிலத்தின் அடங்கிய தேசிய வெப்பத்தை வெளிக் கொணர்ந்து தணிக்கும் கருவியாகவே மாநிலத் தேசியக் கழக (Indian National Congress) இயக்கத்துக்குத் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர் ஆதரவு நல்கினர். ஆனால், அதன் நிழலிலேயே எங்கும் இருபதாம் நூற்றாண்டின் முதற்கால் பகுதி வரை புரட்சிக் குழுக்களும் கழகங்களும் நீடித்து ஆங்காங்கே உழைத்தன. ஆனால், 1907- லிருந்து 1932 -க்குள் மாநிலத் தேசியக் கழகமே அவற்றின் ஆற்றலின் பெரும் பகுதியைத் தனதாக்கி வளர்ந்தது. 1947-ல் அது பிரிட்டிஷாரின் அரசியல் பிடியை மாநிலத்தினின்றும் வெளியேற்றிற்று.
முடிவுரை
மாநிலத் தேசிய இயக்கத்துக்குள் இயக்கமாக மூன்று தனிச் சத்திகளும் அதற்கருகாமையிலேயே வேறு இரு சக்திகளும் தோன்றியுள்ளன. அவற்றின் ஆற்றல் வருங்கால மாநிலத் தேசியத்துக்கும், தமிழக, தென்னகத் தேசீயங்களுக்கும் வழி காட்டிகள் ஆகும்.
மாநிலத் தேசியத்தைப் புரட்சிகரமாகத் திருப்பியவர் களில் தலைசிறந்தவர் வ.உ.சிதம்பரானாரேயாவர். அவர் தோற்றுவித்த கப்பல் போராட்ட இயக்கமும், தொழிலாளர் இயக்கமும் வருங் காலத் தமிழகத் தேசியத்தை உருவாக்கும் விடியல் ஒளிகள் ஆகும்.