உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 17

பினரைத் தருவித்துக் காசுக்கடை வாணிகத்தை அவர்களிடம் ஒப்படைத்தான்.

எதிரரசுகள் இப்போது தம் பகைமையை மெள்ள மெள்ள உரத்த குரலில் காட்டத் தொடங்கின. வாரங்க லாண்ட காபய நாயகன் தான் முன் விட்டுக் கொடுத்திருந்த 'கௌலா’க்கோட்டை யைத் திருப்பித் தரும்படி அறைகூவல் விடுத்தான். விசய நகரும் இரேய்ச்சூர் மண்டல உரிமை பற்றி வலியுறுத்தத் தொடங்கிற்று. இவற்றைத் திருப்பித் தரா விட்டால் வடதிசை துக்ளக் அரசருடன் சேர்ந்து அவரை வரவழைப்பதாகவும் இரு அரசுகளும் அச்சுறுத்தித் தூதனுப்பின.

முகமது 18 மாதங்கள் தூதருக்கு எவ்வகை மறுமொழியும் அனுப்பாமல் அவனைத் தன்னிடமே நிறுத்திக் கொண்டான். ஆனால், அதே சமயம் அவன் போருக்கான மறை ஏற்பாடுகளைச் செய்து படைகளைப் பெருக்கினான். 18 மாதங் கழித்துத் தூதர் எதுவும் கொடுக்க முடியாதென்ற

மூலமாக

அவமதிப்பான மறுமொழியனுப்பினான்.

ஆணவ

காபய நாயகன் தனக்குரியதாகக் கூறி அனுப்பிய 'கௌதல்’ கோட்டையை கைப்பற்றும்படி தன் மகன் வினாயக தேவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். விசய நகரப் பேரரசன் முதலாம் புக்கனின் 20,000 குதிரை வீரரும் அவனுக்குத் துணையாக அனுப்பப்பட்டிருந்தனர். (வாரங்கல் படைத் தலைவன் வினாயக தேவல்ல; நாகதேவ் என்றும் சில ஏடுகள் குறிக்கின்றன.)

பாமினி அரசனின் படைத் தலைவன் பகதூர்க்கான் வினாயக தேவை முறியடித்துத் துரத்தியதுடன் வாரங்கலுக் குள்ளேயே புகுந்து 20 யானைகளையும் 100 ஆயிரம் பொன்களையும் சூறையாக வாரிச் சென்றான்.

முதல் தாக்குதலில் ஒரு சார்பு வென்றும் பகைமைச் செயல்கள் ஒரு சிறிதும் ஓய்வுறவில்லை. எதிர் எதிர் செயல்களாகப் பெருகியே வந்தன. பாமினி அரசருக்காக வணிகரால் கொண்டு செல்லப்பட்ட 1362 குதிரைகளை வினாயகதேவ் வழிமறித்துப் பலவந்தப்படுத்தி விலைக்கு வாங்கினான். இதனால் சீற்றங் கொண்ட முகமது வினாயக தேவைத் தண்டிக்கும்படி வாரங்கல்