உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம் – 17

“சிங்கையில் அனுரையில் இராசையில் செண்பையில் விந்தையில் அறந்தையில் முதலையில் வீரையில் வைப்பாற்... மன்னரை வெந் கண்டு”

எனச் சிதைந்த நிலையிலும் அவன் மெய்க்கீர்த்தி அவன் இலங்கைப் போர் வெற்றிகளைத் தொகுத்துரைக்கின்றன. “கோதற்ற பக்தி அறுபத்து மூவர்தம் கூட்டத்திலோ,

தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ, செம்பொன் அம்பலத்தோ, வேதத்திலோ, சிவலோகத்திலோ, விசுவநாதன் இரு பாதத்திலோ சென்றுபுக்கான் பராக்கிரம பாண்டியனை!”

என்ற இப்புகழ் வேந்தன் மறைவு பற்றிய இரங்கற்பா தென்காசிக் கோயிலில் பொறிக்கப் பெற்றுள்ளது.

இப்போர் வெற்றிகளின் பயனாகவே 1438-ல் இலக்கண்ண தண்ட நாயகன் தனக்குத் 'தட்சிண சமுத்திராதிபதி' என்ற பட்டத்தை யும், விசய நகரப் பேரரசன் இரண்டாம் தேவராயன் 'ஈழம் திறை கொண்ட' என்ற அடைமொழி விருதையும் மேற் கொண்டனர்.

விசய நகர காலத்திலேயே 1385-ல் நடைபெற்ற இளவரசன் விருபாட்சனின் வெற்றியும் இவ்வெற்றியும் ஒரே தொடர்ப் போராட்டத்தின் வெற்றியாக இருக்குமோ என்று ஐயுற இடமுண்டு என்று மேலே கூறியுள்ளோம். எப்படியும் இவ்விரண்டு வெற்றிகளும் மதுரை நாயகர் கால வெற்றிகளும் பாண்டியர் கடல் மரபு தமிழகத்தில் பாண்டியராட்சி மூலமாகவோ வேறு காரண மாகவோ முற்றிலும் அழியாது நிடித்திருந்தது என்பதைக் காட்டு கிறது.

சங்கர நமினார் கோயில் போர் :

திருக்குற்றாலப் போர் : முதலைக்குளப் போர் : வீரகேரளம்புதூர்ப் போர்: (1422 - 1463)

சங்கர நயினார் கோயில், திருக்குற்றாலம், முதலைக்குளம், வீர கேரளம் புதூர் முதலிய இடங்களில் இலங்கை வெற்றி களுக்குரிய அரிகேசரி பராக்கிரம பாண்டியன் தன் பகைவர்களை வென்று புகழெய்தினான் என்று அவன் கல் வெட்டுக்கள் சில