உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 18.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் – 18

ன்று நாம் எண்ணிப்பார்க்கவே முடியாது. எண்ணிப் பார்க்க விரும்பவும் மாட்டோம். ஆரிய இன ஆராய்ச்சிப் பேரறிஞரான இராகுல சாங்கிருத்தியாயனர் இக்கால நிலைகளை இருக்குவேத காலம்வரை நீடித்திருந்த அண்ணன் தங்கை காதல், அதற்கு முன் நிகழ்ந்த தாய் பிள்ளை, தந்தை மகள் காதல் ஆகியவற்றை ஆமளவில் சுவை நயம்படச் சித்திரித்துக் காட்டியுள்ளார். பண்டை எகிப்திலும் சயாமிலும் உடன் பிறந்தார் காதல் உயர் குடிகளில் பழைமை உரிமையாகப் பேணப்பட்டது.

இன்றும் தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் முதலிய வேறெம் மொழியிலும் பெண் கடவாத உறவு (அண்ணன், சிற்றப்பன், சிற்றன்னை), பெண் கடந்த உறவு (மைத்துனன், மாமன், மாமி) ஆகிய வேறுபாடு இல்லை என்பது காணலாம்.

அறிவுப் பண்புடன் காதலில் வெற்றி காண அழகுக்கலை வளர்த்தவள் பெண். இதுவே அவள் காதல் வெற்றியைக் குடும்ப எல்லைக்கு வெளியில் கொண்டு சென்று, குடும்பத்தைச் சமுதாயமாகவும், இனமாகவும் ஓருலகை நோக்கி வளர்த்தது; வளர்த்து வருகிறது.

குடும்பத்துக்கு வெளியே ஆதிக்கம் வளர்த்தவள் என்பதனால்தான் ஆடவன் பெண்மை கண்டு அஞ்சினான். அது தன்னைக் கடந்த ஆற்றல் என்பது கண்டு, அதற்குப் புறவேலியிட்டு அகவிடுதலை பெருக்கினான்!

ஆணின் இவ்வறிவற்ற மடச்செயலைக் கண்டு வள்ளுவர் பெருமான் புன்முறுவலுடன் எள்ளி நகையாடுவது காணலாம். 'சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை!’

அண்ணனை ஆட்கொண்டு அடக்கிய தங்கையாகத் தொடக்கக்காலப் பெண் விளங்கினாள். அவள் அறிவில் மூத்தவளாயிருந்ததை இது காட்டுகிறது. இன்றும் தன்னிலும் மூத்த ஆடவரையே அவள் பாசக் கயிற்றால் பிணிக்கிறாள்!

L

உடன் பிறந்தாரிடமாக மைத்துனர், பெற்றாரிடமாக மாமன் மாமி எனப் பெண் புக்ககத்தில் புதுக் குடும்பத் தொடர்பும் புது உறவு முறையும் வகுத்தாள். இப்பண்பின் தடத்தை ஆங்கில