உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

கடம்பரும்கூட இதே வகைக் கூறத்தக்கவர்களே!

83

குடியரசர்கள் என்று

இக் குடியரசர் உண்மையில் கிரீசிலும் உரோமிலும் குடியரசுக் காலத்துக்கு முன் இருந்த அரசர் நிலையுடையவர்களே. ஆனால், கிரேக்க உரோம நாடுகளில் அவர்கள் தோன்றிய வகை, அவர்களுக்கும் பிற்கால முடியரசர் களுக்கும் உள்ள வேறுபாடு, முடியரசர்களின் 'முடி' தோன்றிய வகை, அது குறித்த பண்புகள் ஆகியவற்றை எளிதில் காண முடியாது. தமிழகத்திலேயே அவற்றை நன்கு காணலாம். இவ்வகையில் உலகின் அரசியல் வரலாற்றுக்கே தமிழக வரலாறு விளக்கம் தருவது ஆகும்.

முடியரசரும் குடியரசரும்

முடியரசர்க்கும் குடியரசர்க்கும் உள்ள வேற்றுமைகள்

யாவை?

முடியரசர்க்கு முடியும் செங்கோலும் உண்டு. குடியரசருக்கு இரண்டும் கிடையாது.

முடியரசர்க்கு நாட்டுப் படையின்றித் தமக்கே உரிய தியம் பெறும் நிலவரப் படை உண்டு. அரசர் பிற நாடுகளைத் தாக்கிப் படையெடுக்க உதவுவது இந்த நிலவரப் படைதான். ஆனால், குடியரசர்க்குத் தம் நாட்டுக் குடிபடையன்றி வேறு படை கிடையாது.

முடியரசர் தம் வெற்றியடிப்படையாக அரசுரிமை பெற்றனர். ஆகவே அவ்வுரிமை அவர்கள் குடிமரபாகச் சென்றது. குடியரசர் மக்களால் விரும்பி மேற்கொள்ளப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் மட்டுமே. அவர்களும் குடிமரபில் அரசராக முடியுமானாலும், அது குடி மரபுரிமையாகாது. தேர்வுரிமையே யாகும்.

குடியரசர் ஆட்சியில் ஐம்பெருங் குழு, எண்பேராயம், பேரவை ஆகிய உறுப்புகளின் உரிமை மீதே மன்னன் ஆட்சி செய்தான்.பேரவையே மற்ற இரண்டு குழுக்களின் மீதும், அவை அரசன் மீதும் ஆட்சி செய்தன. முடியரசர் தம் ஆட்சி வலுவைக் கோரி அம் மூன்று ஆட்சிக் கருவிகளையும் இழக்காது பேணினரானாலும் மன்னர்க்கு இரண்டு குழுக்களும்