உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

93

யன்றி, கீழையுலகுடன் வேறு எத்தகைய தொடர்பும் அற்றவர்களாய் உள்ளனர். அதுமட்டுமன்று, தெரிந்தோ தெரியாமலோ-கீழ்த்திசையில் இயல்நூலறிவின் உயிர் விதை என்றும் முளைக்காமலும், முளைத்தாலும் வளராமலும், வளர்ந்தாலும் உரமின்றி மடிந்தும் களை மூடி மறுகியும் அழியவுமே வழி பிறக்கின்றது. ஏனெனில், இயல் நூலறிவின் உயிர் விதையும் உரமும்; மக்கள் அறிவாற்றலும் பகுத்தறிவுமே யாகும். கீழ்த்திசையெங்கும் பொதுவாக-தென்னாட்டிலும் தமிழகத்திலும் சிறப்பாக-இயல்நூல், ஆராய்ச்சி ஆகியவற்றின் உயிர் விதைகளும், உயிர் உரவள ஆதாரங்களும் வளர வொட்டாமல் தடுக்கும் பண் பு, நச்சுக் களைகள், நச்சுக் காற்றுகள் உள்ளன. புராணங்கள் வளர்க்கும் மத மூட நம்பிக்கைகள், அரசியல் மொழி வாழ்வுகளின் அடிமைச் சூழல்கள், சமுதாய வாழ்வைக் கெடுக்கும் சாதி வருண பேதங்களாகிய ஒழுக்கப் பண்பு கெடுக்கும் ஒழுக்க முறைகள் ஆகியவை அத்தகைய உவர்ப் பண்புகளும், நச்சுக் களைகளும், நச்சுக் காற்றுகளும் ஆகும். நம் கல்வி நிலையங்கள், கல்லூரி, பல்கலைக் கழகங்கள், நம் சமயப் பிரச்சாரங்கள், நம் பத்திரிகைகள், நம் அரசியல் கட்சிகள் இவற்றுக்குத் தெரிந் தும் தெரியாமலும், தன்னலக் குழப்பங்களால் இயக்கப்பட்டும், அறியாமையாலும், தொலைநோக்கின்மையாலும் ஆதரவு தந்து வளர்க்கின்றன.நம் கீழ்த்திசை இலக்கியங்கள், அறிவு நூல்கள்கூட மிகப் பெரும்பாலும் இந்நோய் நச்சுச் சுழலில் பிறந்து வளர்ந்து அவற்றையே ஊக்குவன வாக உள்ளன.

இந்நிலையை மாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு. மேலையுலக வரலாறு அதைச் சுட்டிக் காட்டுகிறது. மேலையுலகின் தலை சிறந்த அறிவு மன்னருள் ஒருவர்-மாத்யூ ஆர்னால்டு-‘பண்பும், பண்புக் கேடும்' என்ற ஒப்பற்ற நூலில் அதை விளக்கியும்

உள்ளார்.

தற்கால மனித நாகரிகத்தின்-அதாவது மேலை உலக நாகரிகத்தின்-உருவளத்துக்குக் காரணமான பண்புத் திறங்கள் மூன்று என்று அவர் வகுத்துள்ளார். அவை கலை ஒளி, அல்லது இனிமை ஒளி. சமய நம்பிக்கை அல்லது யூகப் பண்பு. அதாவது, ஏபிரேய தன்னலப் பண்பு. முற்போக்கறிவு, அல்லது அன்பற்ற சூழ்ச்சியறிவு என்பன. இம் மூன்றனுள் இனிமை ஒளி; கிரேக்க