உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

97

இயற்கை, வாழ்க்கை ஆகிய இரண்டின் மூலமும் முடிவும் (முடிவுக்கு முடிவு அதாவது குறிக்கோளும்), உள்ளீடும் அவற்றை இயக்கும் உயிர்முதலும் பயனும் யாவும் இன்பமே. இயற்கை ஒன்றே, வாழ்க்கை ஒன்றே எனக் கொண்ட வள்ளுவர் இந்த ன்பமும் ஒன்றே ன்றே எனக் கண்டு விளக்கினார். இந்த

ன்பத்தையே அவர் 'இறை' என்றார்.

ஒன்றான இயற்கையமைதியின் அறமுதலும், ஒன்றான வாழ்க்கை யமைதியின் பொருள் முதலும், ஒன்றான இன்ப முதலும் முழுநிறை வாழ்க்கைக் குறிக்கோளான, நாகரிகக் கனவிலக்கான இறைவனே. இதனால், இறைவன் முப்பால் முதல்வன் அல்லது முழுமுதல்வன் ஆகிறான். இயற்கையின் தோற்றமும் வாழ்க்கையின் இயங்கு முதலும் இன்ப முடிவாகிய குறிக்கோளும் அவனேயாதலாலும், அம்முடிவே தோற்றமாகவும், தோற்றமே முடிவாகவும் இடையறாது சுழலுதலாலும், வள்ளுவரும் அவர் வழிநின்ற சமயவாணரும் இறைவனை முப்பால் ஆழி (அற ஆழி) இயக்கும் அந்தணன் என்றும், ஆதி அந்தம் இலாதவன் என்றும், அற (இயற்கை) வடிவினன், பொருள் (அறிவு) வடிவினன், இன்ப வடிவினன் என்றும் கூறியுள்ளனர். இவ்வாசகங்களை நாம் எங்கும் காண லாம் –அவற்றின் அறிவார்ந்த கலைப்பண்பு வாய்ந்த வாழ்க்கை விளக்கத்தை வள்ளுவரிடத்தில் மட்டுமே நாடிப் பெற முடியும்.

ஒன்றே அறம், ஒன்றே பொருள் (வாழ்க்கை), ஒன்றே இன்பம் (வாழ்பயன் வளம்), ஒன்றே இறை; அறத்தின் வழி பொருள், பொருள்வழி இன்பம், அம்மூன்றன் வழி இறை. இதுவே வள்ளுவரின் வியத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை ஒருமைக் கோட்பாடு, இதை உணராதவர் வள்ளுவர் குறளின் சொற்களில் விளையாடும் கிளிப்பிள்ளைகள் அவர் சொற்பொருளும் சொற்பொருளின் உயிர்ப்பொருளும் காணாதவரேயாவர்.

'அறம் ஒன்று, அதுவே இல்லறம்.' ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை'

என்று வள்ளுவர் துணிந்துள்ளது கண்டும் இல்லறத்துக்கு மாறாக ஒரு துறவறம் காண முனைந்துள்ளனர் இடைக்கால

மாயச் சமயவாணர்.