உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ||-

அப்பாத்துரையம் - 19

வேறுபாடு எல்லை விரிவு மட்டுமே என்பதை இது காட்டுகிறது. பக்தித் துறை கடந்து யோகத்துறை நின்ற மறைவாணர்கள் (Mystics) இந்த இரண்டில்கூட விரிவுடைய பேரின்பத்தைவிட எல்லையில் குறுகிய ஆனால், ஆழமிக்க சிற்றின்பப் பண்பையே நீடின்பம், நுணுக்கஇன்பம், பெரும் பேரின்பமாகக் கொண்டு, அம்மொழியிலே கடவுட் பற்றை அகத்துறைபோல விரித்து நுணுகி விளக்கியுள்ளனர். கடவுளுணர்வின் அனுபவமும் காதலுணர்வின் அனுபவமும் ஒரு தன்மையதே என்பதை உலகெங்கும் இத் துறையினர் கண்டுரைத்துள்ளனர். ஆனால், இரண்டும் உண்மையில் ஒன்றே என்று விளக்கியவர் வள்ளுவர் ஒருவரே.

“பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு"

இங்கே பற்று என்பதை, ஆசை அவாவென உரை கண்டனர் உரையாசிரியர்கள். பற்றற்ற தன்மை உயர்நிலையானால் அது மனிதரைவிட விலங்குகளிலும், விலங்குகளைக் காட்டிலும் கீழின உயிரிலும், இவற்றைப் பார்க்கிலும் கல்போன்ற உயிரிலாப் பொருளிலும் எளிதாகக் காணப்படும் பண்பு ஆகும். வள்ளுவர் குறுகிய தற்பற்றையே பற்றெனக் கொண்டார். காதலிலும் கடவு ளுணர்விலும் ஒருங்கே இத் தற்பற்று எளிதில் அழிவதை நாம் இன்றும் காணலாம். உண்மையான கடவுட் பற்று வேறன்று, காதல் வேறன்று.

தமிழர் காதலையும் கடவுட்பற்றையும் ஒரே அகத்துறை யாகக் கொண்டதனால்தான் இரண்டையும் இன்பம் என்றனர். காதலுக்குப் புறப்பற்றுக் கோடாக ஒரு காதலன் அல்லது காதலி வேண்டும். கடவுட்பற்றுக்கு அது தானும் தேவை யில்லை. இதனாலேயே காதல், இன்பத்தின் அல்லது அகத்தின் புறமாகவும், கடவுட் பற்று இன்பத்தின் அல்லது அகத்தின் அகமாகவும் வள்ளுவரால் குறிப்பாய் உணர்த்தப்பட்டது. நல்ல காதலை உணர்ந்தவனுக்கு, அதில் ஈடுபட்டுப் பண்பில் வளர்ந்த வனுக்குக் கடவுட்பற்று வேறு தேவைப்படாது. ஏனெனில், அதுவே கடவுட்பற்றின் உருநிழல், ஒளிநிழல் ஆகும். பாரசீகக் கவிஞர்கள் பொதுவாக, கவிஞர் 'ஜாபீ' சிறப்பாக; தமிழ் மறைவாணக் கவிஞர் பொதுவாக, மாணிக்கவாசகர், நாச்சியார்