உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

||-

அப்பாத்துரையம் - 19

என்று முடிவுறுவது இதனை வலியுறுத்துகிறது. எனவே, கலிப்பா தாழிசை வண்ணங்களில் தொடங்கி, அகவலில் முடிவதுபோல, முத்தமிழ் மும்மை நாடகமாக இயங்கும் சிலப்பதிகாரம் இயற்றமிழ்க் காப்பியம் கொண்டு முடியும் ஒரே நாடகக் காப்பியமாக ஆசிரியர்களால் கருதப்பட்ட தென்றும், அவ்வகையிலே தனித் தனி இயற்றி இணைக்கப்பட்டதென்றும் கருதலாம்.

இதற்மேற்ப, திட்டமிட்டும் திட்டமிடாமல் இயல்பாகவும் இரு ஏடுகளிலும் பல பொதுப் பண்புகள் நிலவுவது காணலாம். இரண்டிலும் காதைகளே உறுப்புக்களின் பெயர்களாக நிலவுகின்றன. காதைகள் 'என்' எனவே முடிகின்றன. இரு நூல்களும் 30 காதைகளுடையவையாகவே இயங்குகின்றன.

ரு

இரு நூல்களும் தொடர்ந்த இரண்டு தலை முறைக்கதைகளையும் தொடர்ந்த ஒரே கால முன் பின் தலைமுறை வாழ்க்கைககளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இரு நூல்களின் கதைத் தொடக்கமும் கதைத் தலையூற்றும் புகாராகவும் இந்திர விழாவாகவுமே அமைக்கப்பட்டுள்ளன.

"எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்!"

என்ற திருக்குறளின் மதிப்புரைக்கு இரு நூல்களுமே தக்க இலக்கியமாகும். இருநூலின் ஆசிரியர்களும் இரு வேறு வகையில் சர்வகலாவல்லவர்களாகத் தம் அறிவு முழுவதையும் இருநூல்களிலும் கொட்டி வைத்திருக்கின்றனர்.

காட்டி

இரு ஆசிரியர்களுமே தம் கால அறிவின் உச்சியில் வீற்றிருந்தவர்கள் என்பதிலும், இருவருமே தமிழ் மொழியைத் தமதாகக் கொண்ட தமிழ் முதல்வர்கள் என்பதிலும் ஐயமில்லை.

'பொருளுக்கேற்ற சொல்தேடி எழுதுவர் பிற புலவர்

ஆனால் இவர் சொற்கேற்பப் பொருள் தொடர்கிறது"

என்று சமற்கிருதப் புலவன் பவபூதியை அவர் நூலின் சிறப்புப்பாயிரம் புகழ்கிறது. சிலம்பு மேகலை ஆசிரியர் வகையில்