உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

அப்பாத்துரையம் - 2 பார்க்கப் பல டங்களில் பல சூத்திரங் களில் மட்டுமல்ல, பல இயல்களில் கூறுவது காணலாம். இன்று உரைநடைஎழுதுவோர் "இதை இன்னோர் இயலில் விளக்குவோம்”. என்று இடவிரிவுக் கஞ்சாமல் கூறுவர். இத்தகை கூற்றுகளுக்குக்கூடத்

தொல்காப்பியர் சூத்திரம் இடம் தருகிறது. பல இடங்களில் தன் சூத்திரத்துக்கு விளக்கம், ஐயுறவு நீக்கம் கருதிப் பின்னும் ஒரு சூத்திரம் எழுத அவர் தயங்கவில்லை. பாணினிக்குப் பின் சூத்திரமுறை வளர்ந்த காலத்தில் இப் பண்புகளை இரு மொழிகளிலும் காண முடியாது. ஓர் எழுத்தைக் குறைக்கச் சூத்திர எழுத்தாளர் அரும்பாடு பட்டுள்ளதுண்டு.

மேலும், மொழியின் பொது இயல்புகளைத் தொல்காப்பியர் விளக்குவதன்றி, எல்லாச் சொற்களையும் அல்லது எல்லாச் செய்திகளையும் ஒரு நூலில் அடக்கிக் காட்டச் சிறிதும் முயன்றதாகக் காணவில்லை. பலவிடங்களில் முந்து நூல்களில் காணுமாறு விட்டும் பலவற்றைச் சாடையாகக் குறித்தும் செல்கிறார்.

ஒரே

கால

சூத்திரங்கள் வடபுலங்களிலும் தமிழிலும் கிட்டத்தட்ட வளர்ச்சியுடையவை என்னலாம். தமிழில் சமற்கிருதத்தைப் பின்பற்றி நன்னூலாரும் சமய நெறிகளில் மெய்கண்டாரும் பின்னாளில் அதே செறிவு கண்டனர். ஆனால், பாணினிக்கு முற்பட்ட சூத்திர நடைப் பண்புக்குத் திருக்குறளின் குறட்பாக்களும் தொல்காப்பியர் சூத்திரங்களும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். அழகு குன்றாத செறிவை வள்ளுவர் குறட்பாக்களிலும், அழகும் எளிமையும் ததும்பும் சுருக்கத்தைத் தொல்காப்பியத்திலும் காணலாம்.

பாணினியின் காலத்தைக்கூட வடபுல ஆராய்ச்சியாளர் முடிவுபடுத்திக் கூறிவிடவில்லை. அவர் கி.மு. நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் அல்லர் என்று தெளிவாகக் கூறலாம். தொல்காப்பியர் காலத்தை வரையறுத்துக் கூறத் தமிழர்க்குரிய வாய்ப்பு இன்னும் குறைவு. ஆனால், பாணினியின் பின்னெல்லைக் காலமாகிய கி.மு. 4-ஆம் நூற்றாண்டுக்கு அவர் பின்னெல்லை மிகவும் முற்பட்டதாயிருத்தல் வேண்டுமென்று மட்டும் இப்போது நாம் தோராயமாகக் குறிக்கலாம்.