திராவிடப் பண்பு
203
தருகிறார்: வங்காள நாட்டின் செக்கு வாணிகர் யாவரும், எண்ணெய் விதைகள் அரைக்கப்படும் செக்குக் குழியின் அடியில் துளைஒன்றை இடும் புதுமுறைப் பழக்கம் வரும் வரை, ஒரே சாதியாய்த் தான் இருந்தனர்; அப்பழக்கம் வந்தபின் புதிய முறையை மேற்கொண்டவர் ஒரு தனிச் சாதியாகவும், பழைய முறைப்படி எண்ணெயைக் கூடிய மட்டும் மொண்டு எடுத்து, மீந்ததைத் துணியில் தோய்த்துப் பிழிந்து வந்தவர்களைவிடச் சமூக சாதிப்படியில் தாழ்ந்தவர்களாகவும் ஆயினர்.
13. ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதியின் தோற்றம் பொருளியல் சார்ந்ததெனக் கொள்வதைவிட மிகுதியாக, அரசியல் சார்ந்ததென்றே கொள்கின்றனர். சாதியின் படிப்படியான உயர்வு முறையிலும், சாதியுயர்வு பேரளவில் செந்நிறம் (fair colouration) நோக்கிச் செல்லும் நிலையிலும் அவர்கள் முனைந்து கருத்துச் செலுத்தி அதனைச் சிறிது மிகைப்படுத்தினர். ஆகவே, சாதிமுறை வடமேற்குக் கணவாய் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக வந்த படையெடுப்புக்களின் விளைவு என்றும், ஒவ்வொரு படையெடுப் பாளரும் முந்திய படையெடுப்பாளரை விட மிகுதியான செந்நிறம் உயரமான பாரித்த உடல், போர்ப்பண்பு இவற்றை உடையவராகவும் இருந்தனரென்றும் அவர்கள் கருதினர். ஒவ்வொரு புதிய படையெடுப்புக்குழுவும் தேசமுழுவதும் பரந்து, முன்படையெடுப்புகளில் வந்துவிட்ட மக்களிடையே பெண்கள் எடுத்தனராயினும், தம் இன உயர்வுச் செருக்கினால் தூண்டப்பட்டு, தம் பிள்ளைகள், சிறப்பாகப் பெண் குழந்தைகள், நாட்டு மக்களுடன் மணஞ் செய்து கலப்பதைக் கண்டிப்பான விதிகளால் தடுத்தனர். இதனால், அவர்கள் மரபினர் (பிறரோடு கலவாத) ஒரு தனிச் சாதி ஆயினர்.
14. மேற்கூறிய இரண்டு கோட்பாடுகளிலும் ஓரளவு உண்மையின் கூறுகள் இருக்கின்றன எனினும், இன்றைய நிலையையும் கவனித்து அவற்றில் நாம் சில திருத்தங்கள் செய்யவேண்டியுள்ளது. இருகோட்பாடு களின்படியுமே தென் இந்தியாவை விட வட இந்தியாவே சாதிமுறையின் சிறப்பான வாழ்வகமாய் இருந்திருக்க வேண்டும். (ஏனெனில், முதற் கோட்பாட்டின்படி வடஇந்தியாதான் மிகுதியும் ஆரியமயமாகியுள்ளது. இரண்டாவதின்படி அடுத்தடுத்து அந்நியர் படையெடுப்புக்கு ஆளானது வட இந்தியாவே).ஆனாலும் நிலைமை இதற்கு நேர்மாறானதென்பது நன்கு அறிந்த உண்மை. வட இந்தியாவைவிடத் தென் இந்தியாவில் தான் சாதி முறைமை வலுப்பெற்றதாக, பெருக்கமுடையதாக, சமூக வாழ்வில் மிகப்பெரும் பங்குடையதாக இருக்கிறது. அதுமட்டுமன்று. அரபிக்கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சிமலைக்கும் இடையிலுள்ள மலையாளத் தீரம் வடக்கிலிருந்து நிலவழிவந்த படையெடுப்புக்களுக்குச் சிறிதும் இடமில்லாமல் துண்டுபட்டுக்கிடக்கும் ஒரு பகுதியாகும். ஆனால்