உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 20.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திராவிடப் பண்பு

(205

பண்பாயுள்ள, ஒரு மந்திரக் குருமார் வகுப்பு அல்லது சாதி (priest magician class or caste)இருந்ததென்று அறியலாம். அத்துடன் பிராமணசாதி, (வீரர் அல்லது) சத்திரியர் சாதிக்கு மேற்பட்ட பிராமண ஆதிக்கம் இரண்டும் திராவிட மரபுகளே என்பதையும் இதுவே நேரிடையாக நிறுவுகிறது. தெளிவான இந்த முடிவுக்கு ஓல்டுஹாம் வரவில்லையானாலும், அவர் மேற்கோளாகக் காட்டும் நுண்ணிய சான்றுகளே அதை நிறுவப் போதியவை.

16.(i) ஓல்டுஹாம் (80-ஆம் பக்கத்தில்) குறிப்பிடுகிறபடி, கண்ணன் (கிருஷ்ணன்) பிராமணர்களின் சிறப்பான பாதுகாவலன். அவர்கள் கால்களைக் கழுவி மரியாதை செய்வது அவன் வழக்கம். 'ஆரியரல்லாத வருக்குரிய கருமேனி உடையவன் அவன்' என்ற மரபைக் கலைமரபு இன்றும் மாறாமல் காத்து வந்துள்ளது; அவன் நிறம் எப்போதும் நீலமாகவே தீட்டப் படுகிறது. பிறப்பு வகையிலும், அவன் திருமாலின் அவதாரம் மட்டுமன்றி, ஆர்யகன் என்ற நாகர் தலைவனின் கொள்ளுப் பேரனான வாசுதேவன் மகன். “நாகர்” என்ற சொல் பாம்பையும் குறிக்கும்; மனிதருக்கு வழங்கப்படும் போது நாகவழிபாட்டினரையும் குறிக்கும். சமஸ்கிருத இதிகாச ஏடுகளில் அது பொதுவாக அசுர, தஸ்யூ, தைத்ய, தானவ ஆகிய சொற்களின் மறு வடிவமாகவே, வட இந்தியாவில் அதுவரை வென்றடக்கப் படாதிருந்த திராவிடரைக் குறிக்கும் பொதுச் சொல்லாக வழங்குகிறது.

(II) மீண்டும் (78-ஆம் பக்கத்தில்): “கண்ணனின் தமையனான பலராமன் தலைமீது பல பாம்புகளின் படங்கள் கவிந்து காப்பளிப்பதாகக் காட்டப்படுகிறது. அவன் சேடநாகனின் அவதாரம் எனப்படுகிறான். கண்ணன் இறந்தபோது அவன் வாய்வழியாக, ஒரு பெரிய பாம்பு வடிவில், அவன் ஆன்மா வெளியேறிச் சென்றது.

99

(III)மகாபாரதத்திலிருந்து (அதே78-ம் பக்கத்தில்): “அசுரர் (திராவிடர்) களின் தலைமைக்குருவான சுக்கிரன் தன்னுடைய தவத்தின் பெருமையால் தன்னை இருகூறாக்கிக்கொண்டு தைத்தியர்கள் (திராவிடர்கள்), தேவர்கள் (ஆரியர்கள்) ஆகிய இரு சாராருக்குமே சமயகுரு ஆனான்,” திராவிடர் களின் விரிவான குருமார்சாதியானது தனது சமயத்துறை ஆட்சியை ஆரியர் மீதும் வெற்றிகரமாகச் சுமத்திற்று என்பதை இது நிறுவகிறது.

(iv) விஷ்ணுபுராணம் தரும் தகவலின்படி சுக்கிரன் அல்லது உசானஸ் என்பவன் எரிஓம்பி, மந்திரங்கள் கூறி, ஆரியர் தெய்வமான இந்திரனுக்கெதிராக அசுரர்கள் அல்லது திராவிடர்களின் வெற்றிக்காக அதர்வண வேதத்தை ஓதினான்; அவனே (ஆரியரான தேவர்களால் கொல்லப்பட்ட) திராவிட தானவர்களுக்கு உயிரூட்டினான். சுக்கிரன் பிருகு என்ற பெரிய ரிஷியின் மகன்; பிருகுவும் ஒரு திராவிட குரு மந்திரவாதியே (priest magician) ஆனாலும் பிருகுவின் மக்கள் பிராமணர். அத்துடன்