உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம் - 22

ஆய்ந்தமைந்து துய்க்க முடியாத மக்கள் அச் சமயம் அவ்வணங்கிற்கு இயல்பான தீமையை விட மிகுதியான தீங்கை அவள் மீது சுமத்தி விடுவர்.

புத்தக அறிவைவிட மக்கள் முகக் குறிகளை அறியும் அறிவே ஒருவருக்கு மதிப்புத் தருவதாகும். “ எதற்காக?” என்ற சிடு சிடுப்புவரை முகத்தில் தோன்றி எச்சரிக்கும். “சரி அப்படியே!” என்ற இணங்குபவரையோ ஊக்கும். இவற்றையோ நேரச் சுழல் வாய்ப்புகளையோ கவனியாதவர்கள் பிறர் கவனத்துக்கும் ஒத்துணர்வுக்கும் உரியவர்கள் ஆகமுடியாது.

'சிற்சில சமங்களில் பெண்கள் தமக்குத் தெரிந்த அளவை விடக் குறைவாகவே அறிவதாக நடித்தல் நலம். அதுபோல அடிக்கடி சொல்ல விரும்புபவற்றில் ஒரு பகுதியையே...'

இவ்வளவு நேரமும் கெஞ்சி உரையாடலில் அவ்வப் போது இடையிடையே கலந்து கொண்ட போதிலும் தன் உள்ளத்தின் உள்ளாக ஒருவரைப் பற்றிய ஒரே சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தான். அந்த ஓர் அணங்கைப் பற்றி அவன் சிந்திக்குந்தோறும், சிந்திக்குந்தோறும் பெண்ணினத்துக்கே யுரியவையாக நண்பர்கள் குறித்த குறைபாடுகள், மிகைபாடுகள் ஆகியவற்றில் எதன் தடத்தையும் அவன் அவளிடம் காண முடியவில்லை.

அவளைப் போல யாரும் இல்லை!' என்று அவன் நினைத்தான் - அவன் உள்ளம் நிறைவடைந்திருந்தது.

நண்பர் உரையாடல் அவர்களை ஒரு தெளிவான முடிவுக்குக் கொண்டு வரவேயில்லை. ஆனால், அது பல புத்தார்வக் கதைத் துணுக்குகளுக்கும் கருத்துகளுக்கும் மட்டும் டம் தந்தது. இரவை இவ்வாறு. கழித்துவந்தவர்கள் இறுதியில் திடுமென வானிலை மாறி விட்டது கண்டனர். மழை ஓய்ந்து விட்டது.

கெஞ்சி இளவரசன் அரண்மனையிலேயே இப்போது நீண்ட காலம் கழித்து விட்டதால், பெரு மாடத்தில் தன்னை யாவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் உணர்ந்தான். அவ்விடத்துக்கே புறப்பட்டான்.

என்று