உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

87

கெஞ்சி இதனை உற்றுக் கேட்டு, அவன் கவலையை இனிய நகை முகத்துடனே அகற்றினான். 'நீ கவலை கொள்ள வேண்டாம், கீநோ கமி! அம் மாதரசியின் அருகிலேயே இருக்க நேர்வது பற்றி நான் மகிழ்கிறேன். மனைபுகும் சமயம் வரவேற்க ஒரு மனைத் தலைவி இருப்பதும் விரும்பத்தக்கது தானே! மேலும் அம் மாதரசியின் திரை மறைவிலேயே எனக்கு ஒரு மூலை கிடைத்தால்...'

கீ நோ கமி இந்தக் கேலியைப் பொருட்படுத்தவில்லை. 'அப்படியும் உங்களுக்கு' என்று தன் வசதிக் குறையை விளக்கப் புகுத்தான். ஆயினும் அதைக் கூறி முடிக்காமலே ஓர் ஏவலனை அனுப்பி இளவரசனுக்கு மனையின் ஓர் அறையைச் சித்தம் செய்யும்படி சொல்லியனுப்பினான். இவ்வளவு எளிய மனை செல்வதை இயல்பான ஒரு நிகழ்ச்சியாக்கி, கெஞ்சி ஒரு சில நம்பகமான மெய்க்காவலரை மட்டும் உடன் கொண்டு அக்கணமே புறப்பட்டான். இவ்வளவு அவசரம் வேண்டா மென்று கீ நோகமி தடுத்தும் கெஞ்சி அதைப் பொருட் படுத்தவில்லை.

கீ நோ கமியின் மனையில் நடுக் கூடத்தின் கீழ்கோடி அறையைத் தூசு துடைத்துத் துப்புரவு செய்து வேலையாட்கள் அதை இளவரசன் தற்காலிகத் தங்கலிடம் ஆக்கினர் அத்துடன் பலகணிகளின் பக்கமிருந்து பார்க்கத் தக்க மனைப்புறப் பகுதிகளின் அழகில் அவர்கள் பெருங் கருத்துச் செலுத் தினார்கள். அதற்காகவே அவர்கள் சில ஓடைகள்,

கால்வாய்களின் போக்கை மாற்றியமைத்தார்கள். நாட்டுப்புறப் பாணியில் தட்டிவேலிகள் அமைத்து அதனருகே அழகிய செடி கொடிகளை நட்டனர்.

செடி கொடிகளிடையே குளிர் நறுந்தென்றல் இனிது தவழ்ந்தது. அவற்றின் மீது வண்டினங்களின் இனிய கீதம் மிதந்தது. வானவெளியில் எண்ணற்ற மின் மினிகள் அழகிய இருள் ஒளிக் கோலங்கள் இ

ன.

மனை சூழ்ந்த அகழி மீது மனை செல்வதற்குரிய பாலம் அமைந்த இடத்தருகே வந்து இளவரசன் குழாத்தினர் அமர்ந்து குடித் திளைப்பாறினர்.