உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

99

காதலனையோ, உன்னைப் போல இரக்கமற்ற கல் நெஞ்சக் காதலியையோ உலகம் இதுவரை கண்டிராது' என்று கூறி முடித்தான்.

பறவைகள் ஏற்கெனவே வாய் விட்டுப் பாடிக் கொண்டி

ருந்தன.

தான் கவையற்றவள்; அவரோ இளவரசர் இதை அவள் ஒரு கணமும் மறக்க முடியவில்லை. ஆகவே தான் மென் மொழிகளால் அவளிடம் அவன் மன்றாடிய போது கூட, அவள் உள்ளம் தன் கணவன் இயோ நோ கமியின் முகத்தைத் தன்னகத்தே உருவகப்படுத்திக் கொண்டது. பொதுவாக அவள் அவனை நினைப்பதேயில்லை. நினைத்தாலும் வெறுப்புடன் தான் நினைப்பதே வழக்கம். ஆனால், இப்போது நினைப்பது இன்றியமையா உயிர்க்கடன் என்று அவள் கருதினாள். கற்பனையில் இவ்வாறு வந்து கண்ட கணவன், கனவிலேனும் தனது இப்போதைய நிலையைக் கண்டு விட்டால் என்ன செய் வது என்று அவள் நடுங்கினாள் - அந்த எண்ணமே அவளை அச்சத்தாலும், வெட்கத்தாலும் துணுக்குறச் செய்தது.

பகலொளி பரவி விட்டது. கெஞ்சி அவளுடன் இடைத் தட்டியின் கதவருகே சென்றான். அதன் இப்புறமும் அப்புறமும் காலடிகள் விரைந்தன அவளைக் கதவுக்கப்பால் விடுத்து அதைச் சார்த்தும் சமயம், தன் வாழ்வின் இன்பத்திலிருந்தே தான் அடைபட்டு விட்டதாக அவன் கருதினான். ஆடை திருத்திக் கொண்டு அவன் உப்பரிகை மீது சென்று உலவினான்.

மேல்சிறகிலிருந்து ஒரு திரை இப்போது அவசரமாக விலக்கப்பட்டது. பல கண்கள் இப்போது ஆர்வத்துடன் இளவரசனையே நோக்கின. தாழ்வாரத்திலுள்ள ஒரு தட்டி அவன் உருவைப் பாதி மறைத்தது. அவனை முற்றிலும் தெளிவாக அவர்களால் காணக்கூடவில்லை. எனினும் காணும் அவா அவர்களை நீடித்து நிற்கத் தூண்டிற்று. அவ்வுருவங்களில் ஒன்று தன் உள்ளத்தைத் துடிக்க வைத்த அணங்காய் இருக்கக் கூடுமோ என்று நினைத்து அவன் பெருமூச்சு விட்டான்.

நிலா மறையவில்லை. மங்கிய ஒளியுடனே விடியற் கால வானொளியிலும் அது தெளிவாகத் தெரிந்தது. அன்றைய