உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

அப்பாத்துரையம் - 22

கெஞ்சி ஒரு கடிதம் கொடுத்தபோது, எத்தகைய கேள்வியும் கேளாமலே அதைக் கொண்டுசென்றான்.

க்கடிதம் அவள் உள்ளத்தின் ணர்ச்சிகளைப் புயலாக்கிக் கிளறி விட்டது. அவள் கண்கள் மழையாகப் பொழிந்தன. இதைத் தம்பி காணாதபடி அவள் வாசிக்கும் கடிதத்தைக் கொண்டே தன் முகத்தை மறைத்துக் கொண்டாள். கடிதம் நெடுநீளமாயிருந்தது. பல முறையீடுகளுக் கிடையில் அதில் ஒரு பாடலும் இடம் பெற்றிருந்தது.

‘கண்ட கனவையே கனவாக மீண்டும்

காண்பேனோ? இவ்விருப்பம் எழுந்த கண முதலாய் அந்தோ, இமைகள் இருவிழியும் பகைத்தனவே!

இவ்வளவு அழகான கையெழுத்தை அவள் இதற்கு முன் என்றும் கண்ட தேயில்லை. அவள் கண்களை ஒரு நீர்ப்படலம் வந்து மூடிற்று. 'என்னே விதியின் விசித்திரத் திருவிளையாட்டு? அதுவே முதலில் அவளை ஒரு ‘சூரியோ' வின் மனைவியாக்கிக் கொக்கரித்தது - இப்போது ஒரு கணம் இந்தப் பொன்னார் முகில்மீது உயர்த்தி வைத்துக் கேலி செய்கிறது! அவள் நெஞ்சம் எதெதையோ நினைத்து ஆழ்ந்து சிந்தித்தது. அவள் தன் அறைக்குள் சென்றாள்.

மறுநாள் கெஞ்சி சிறுவனைத் தன்னிடம் வரும்படி அழைப்பு விடுத்தான். அவன் இப்போது தமக்கையை அணுகினான். 'நான் கெஞ்சி இளவரசனிடம் செல்கிறேன். அவர் கடிதத்துக்கு உன் மறு மொழி எங்கே?' என்று கேட்டான். அவள் கடிதம் எதுவும் தரவில்லை. 'அங்கே இத்தகைய கடிதங்களை வாசிக்கத் தக்கவர் எவரும் கிடையாதென்று அவரிடம் சொல்லு' என்றாள். சிறுவன் இது கேட்டுச் சிரித்தான். ‘என்ன மட்டிப் பெண் நீ, இதைப்போய் நான் எப்படி அவரிடம் சொல்ல முடியும்? கட்டாயம் பதில் கடிதம் வாங்கி வரும்படி தான் அவர் என்னிடம் கூறியிருக்கிறார்' என்றான். கெஞ்சி சிறுவனிடம் இந்த அளவுக்குத் தன் அந்தரங்கம் உரைத்ததை எண்ணி அவள் சீற்ற மடைந்தாள். 'இந்த வயதில் இம்மாதிரிக் காரியங்களை அவர் உன்னிடம் கூறவே நியாயமில்லை. அங்கே போய் இம்மாதிரிப் பேச்சுகளுக்கு இடம் கொடுப்பதானால், நீ