உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

111

அரையிருளின் அமைதி குடி கொண்டிருந்தது. அப்போது சிறுவன் கெஞ்சியை மனைக்கு இட்டுச் செல்ல ஒரு வண்டி கொண்டு வந்தான். கெஞ்சியும் அன்று முற்றிலும் இளஞ்சிறுவன் பாதுகாப்புக்கே எல்லாவற்றையும் விட்டுவிடவில்லை. மாறு வேடத்தின் மறைவையும் மேற்கொண்டான். ஆயினும் தன் ஆத்திர அவசரத்தில் வண்டி செல்லத் திறந்த தன் மாளிகை வாயிலைச் சார்த்தக் கூட மறந்து வண்டியை அவன் வேகமாக ஓட விட்டான்.

மனையின் ஒரு பக்க வாயிலில் சென்றதும் இருவரும் இறங்கினர். இளமை காரணமாகத் தன் போக்குவரவு பற்றிக் காவலரோ தோட்டக்காரரோ எதுவும் கூற மாட்டார்கள் என்பது சிறுவனுக்குத் தெரியும். தன்னளவில் உள்ளே செல்ல அவன் தயங்கவில்லை. ஆகவே இரட்டைக்கதவுகளிட்ட கீழ்அறை வாயில்முகப்பில் கெஞ்சியைப் பதுங்கியிருக்க வைத்துவிட்டு உள்ளே சென்றான். ஒளிந்து மறைந்து செல்ல முயலாமல், மனையின் நடுப் பகுதிக்குச் செல்லும் சறுக்குக் கதவைத் தட்டி முழக்கினான். ‘புழுக்கமிக்க இந்த இரவில் கதவுகளை யெல்லாம் ஏன் சாத்தி வைத்திருக்கிறீர்கள்' என்று பணிப் பெண்கள் அனைவரும் கேட்கும்படியாக அதிகாரம் செய்தான், 'மேல் மாடத்து நங்கை காலையிலிருந்து இங்கே இருக்கிறாள். நம் மாதரசியுடன் நாற்கட்ட ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்' என்று பணிப் பெண்கள் பதிலளித்தனர்.

மேல் மாடத்து நங்கை என்றது - கீ நோ கமியின் உடன் பிறந்தாளையே.

உத்சுசேமி தனியா யிராமல் வேறொரு தோழியுடன் இருந்தாலும் கெஞ்சிக்கு அவளைக் காணும் ஆர்வம் பெரி தாயிற்று. அவன் மெல்லப் பதுங்கிச் சென்று தட்டி வாசலின் ஒரு சிறு பிளவு வழியே உட்சென்றான், சிறுவன் திறந்து சென்ற வாயில் திறந்தபடியே இருந்தது. அதனூடாக இடைக் கூடமும், அது கடந்து நங்கையர் இருந்த அறையும் தெளிவாகத் தெரிந்தது. அறையின் கதவின் மீதிட்ட திரை பாதி மடிக்கப்பட்டிருந்தது. நுழை தட்டிகளும் புழுக்கங் காரணமாக முற்றிலும் திறந்து வைக்கப்பட்டே யிருந்தன. க்காரணங் களால் அறையின் உள்ளே யிருந்த காட்சி முழுவதும் கெஞ்சிக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.