உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(114) || -

அப்பாத்துரையம் - 22

நன்கு எடுத்துக்காட்டிற்று. அவள் கண்ணிமைகளை நோக்க. கண் சிறிது வீக்கமுற்றிருந்ததோ என்று கெஞ்சிக்குத் தோற்றிற்று. வடிவமைதியிலும் பல கோணங்களில் மென்னயக் கவர்ச்சி சிறிது குறைபடுவதாகவே காணப்பட்டது. அதே சமயம் மறைபடும் பகுதிகளிலேயே அவளது சிறந்த கவர்ச்சிக் கூறுகள் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அவள்வாய் திறந்த போதோ, காட்சியின் குறைகளனைத்தையும் அதன் மூலமே சரி செய்துவிடும் உறுதி அதில் இருந்தது. தோழியளவு அழகு அவளிடம் இல்லையாயினும், அவளைக் கடந்த அரிய மதி நுட்பம் இருந்ததென்பதில் கெஞ்சிக்கு ஐயமில்லை.

உத்சுசேமியின் தோழியோ, தன் மாயக் கவர்ச்சியின் அலைகளை எங்கும் தங்கு தடையில்லாமல் பரவவிடுபவளாகவே இருந்தாள்.அவள் இடைவிடா நகைப்பும் எக்களிப்பும் காட்சிக்கு இனிமையே தந்தன. ஒருவகையில் அவள் எவரையும் எளிதில் கவர்ந்து மகிழ்வூட்டும் நிறம் உடையவளாகவே அமைந்தாள். அவள் ஒழுக்கக் கட்டுப்பாடு பற்றிக் கெஞ்சி அவ்வளவாக உயர்மதிப்புக் கொண்டதில்லை. ஆனால் இது முற்றிலும் குறை என்றே அவன் இச்சமயம் கருதவில்லை.

தனி மனிதர் இயல்பாக ஒருவர் ஒருவருடன் பழகுவதைக் காண்பதில் கெஞ்சி புத்தார்வம் கொண்டவன். அத்துடன் செயற்கையான புற ஆசாரக்

கட்டுப்பாடுகளிடையே வளர்ந்தவன் அவன். மக்கள் நாள்முறை வாழ்வுகூட அதில் பழகாத கெஞ்சிக்கு ஒரு புத்தம் புதுக்காட்சியா யிருந்தது. ஆகவே தம் மீது பிறர் கண்பார்வை இருப்பதாகவே அறியாத அவ்விருவரையும் மறைந்துநின்று ஒற்றாடுவது அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை யானாலும், அவ்வார்வம் காரணமாக அவன் மேலும் தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தான். ஆனால் தமக்கையின் அருகிலேயே அமர்ந்திருந்த சிறுவன் இப்போது புறப்பட எழுந்துவிட்டது கண்டு அவனும் முன் தான் மறைந்திருந்த இடத்துக்கே மெல்லத் திரும்பினான்.

கெஞ்சியை அவ்வளவு நேரம் காக்க வைத்ததற்காகச் சிறுவன் மிகவும் வருத்தம் தெரிவித்தான். அத்துடன் ‘இன்று ஒன்றுமே சாயாது என்றுதான் தோற்றுகிறது. என் செய்வது? அவளுடன் விருந்தாளி ஒருவர் இருக்கிறார்' என்றான்.