உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. யுகாவ்

ம்

ஆறாவது வளாகத்தைச் சேர்ந்த மாதரசி ரோக்கு ஜோ சீமாட்டி கெஞ்சியின் இரகசியக் காதல் வாழ்வில் இடம் பெற்றிருந்த காலம் இது.

ஒருநாள் அவன் அரண்மனையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சமயம், வழியில் தன் செவிலித்தாயைக் காணவேண்டுமென்ற விருப்பம் அவனுக்கு ஏற்பட்டது. அவள் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு, உலகவாழ்விலிருந்து ஒதுங்கி ஐந்தாவது வளாகத்திலேயே ஒரு புத்த துறவு நங்கையாய் வாழ்ந்து வந்தாள். பலரிடம் உசாவி வீடறிந்து கொண்ட பின்னும், முன் வாயில் பூட்டப்பட்டிருந்ததால் கெஞ்சி தன் வண்டியை உள்ளே செலுத்த முடியவில்லை. ஆகவே செவிலித்தாயின் புதல்வனான கோரெமிட்சுவைச் சென்று காண ஒரு பணியாளை அனுப்பிவிட்டு அவன் அருகிலே அரை குறைப் பாழ் நிலையிலிருந்த ஒரு சிறு கிளைச்சந்தைப் பார்வையிட எண்ணி இறங்கினான்.

அடுத்திருந்த முதல் வாயில் கதவுக்குப் புதிய கழிகளால் வேலியிடப்பட்டிருந்தது, அதன் மேல்புறம் ஐந்தாறு தொகுதி களாகக் கொடிகள் படர்வதற்குரிய பின்னல் சட்டங்கள் அமைந்திருந்தன. இவற்றை மறைத்திருந்த வெண்திரையில் ஆங்காங்கே சிறு கீறல் கிழிசல்கள் இருந்தன. அவற்றினூடாகப் பல கண்கள் - பெண்டிர் கண்கள் கெஞ்சியை ஆவலுடன்

கூர்ந்து நோக்கியிருந்தன.

www

தான் செல்லும் சமயம் தற்செயலாகப் பார்க்கும் கண்களே அவை என்று அவன் முதலில் எண்ணினான். ஆனால் நிலத்தளத்துக்கும் அக்கண்களுக்கும் உள்ள தூரத்தை நோக்க, மனித எல்லை கடந்த அரக்கராயிருந்தாலன்றி, அவர்கள் நிலத்தளத்தில் நின்று அவ்வாறு நோக்க முடியாது என்பது