உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

139

ச்சமயம் தளர்ந்த, ஆனால் மருட்சியூட்டும் காலுறைகளும் உடையும் அணிந்த நயநாகரிகமிக்க பணிப்பைதல் ஒருவன் மலர்களிடையே புகுந்தான். பனித்துளிகளுடன் ஊடாடி நடந்து கொண்டே அவன் கதிர் வட்ட மலர்களின் ஒரு கொத்தைக் கொய்து திரட்டினான். இவ் அழகுக் காட்சியை ஓர் ஓவியமாகத் தீட்ட விரும்பினான் கெஞ்சி.

கெஞ்சியின் தோற்றம் கண்டு கண்டு அகமகிழாதவர் இல்லை. முரட்டு மலையாடுகூடத் தங்கி இளைப்பாறி மகிழும் இனிய நிழலையுடைய மலர் தரும் தருப்போன்றவன் அவன். அவனை உணர்ந்து அவனது மாயமருட்சியிலீடுபட்டவர்கள் தத்தமக்கு எதெது உயிரினும் அரிதாகத் தோற்றுகிறதோ, அதை அவனுக்குத் தந்து அவனுடன் உறவாட அவா ஆர்வம் கொண்டனர். அருமை பெருமையாக வளர்த்த செல்வப் புதல்வியை உடையவர், அவளை அவன் பணிப் பெண்ணாகக் காண்பதைவிட எதையும் உயர்வாக விரும்பியதில்லை. தகுதியிற் சிறந்த தங்கையுடையவர் தயங்காது அவளை அவன் இல்லத்தில் எவ்வளவு தாழ்ந்த குற்றேவலாகினும் செய்யும் ஏவற் பெண்டாகக் காணும் ஏக்கம் கொண்டனர். அவ்வப்போது அவனுடன் உரையாடி மகிழ்ந்து, மனங் கொண்ட மட்டும் அவனுடனிருந்து அவனைக் கண்டு ஊட ஊடாடும் தனி உரிமை பெற்ற அணங்குகள் -சிறப்பாக இளமை நலம் வாய்த்த நங்கையர்கள் அவன் வருகை எல்லையில்லா மகிழ்வு கொண்டனர். அவன் தோழமையில் எக்காரணத்தாலேனும் சற்று அருகிக்குறைந்தால், அதற்காக அவர்கள் வருந்தாமலிருக்க முடியவில்லை.

-

கெஞ்சியைத் தொடர்ந்து எங்கோ சென்று விட்டோம். ஆம். அவன் ஆணை பெற்றுச் சென்ற கோரெமிட்சுவைக் கவனிப்போம். தலைவன் தன்னிடம் ஒப்படைத்த பணியில் அவன் பொறுமையுடன் தொடர்ந்து விசாரணைகள் செய்து கொண்டே வந்தான்.

புலன் விசாரணையின் பயனை அவன் கெஞ்சியிடம் எடுத்துரைத்தான்.

வீட்டுக்குத் தலைவி யார் என்று சிறிதும் விளங்கவில்லை. அதை மறைத்து வைக்க அவள் அரும்பாடு படுகிறாள். ஆனால்