உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

149

முன்னெச்சரிப்பை யெல்லாம் முற்றிலும் புறக்கணித்து விட்டு அவன் அவளது பணிப்பெண் உகானை அழைத்தான். அதன் பின் அவன் வேலையாட்கள் மூலம் ஒரு வண்டி கொண்டு வரும்படி உத்தரவிட்டான். இச்செய்தி விரைந்து மனை முழுவதும் தெரிய வந்தது. தங்கள் தலைவி இப்படி திடுமென எங்கோ கொண்டு செல்லப்படுவது கண்டு பெண்டிர் சிறிது கலவரமடைந்தனர். ஆயினும் அவளுக்குத் தீங்கு நாடுபவனாகக் கெஞ்சி ஒரு சிறிது கூடத் தோற்றமளிக்கவில்லை.

இப்போது கிட்டத்தட்டப் பகலொளியாயிற்று. சேவல்கள் கூவி நிறுத்திவிட்டன. திருமலை செல்வதற்குப் புறப்பட்டிருந்த தீர்த்த யாத்திரியான ஒரு முதியவன் குரல் இப்போது சிறிது தொலைவில் காதுகளில் பட்டது. ஒவ்வொரு வணக்க வழிபாட்டுடனும் அவன் தலை நிலம் தோயக் குனிந்தெழுந்த தனால், அவனது ஒவ்வோரசைவிலும் அவனுக்கு எவ்வளவு நோவும் தளர்ச்சியும் இருந்தன என்பது தெளிவாயிற்று. காலைப் பனியில் அப்பனியிலும் நொய்தாகக் தோற்றிய வாழ்வினை நோக்க, இந்த முதியோன் தன் தொழுகையின் போது என்ன தான் வேண்டிக் கொள்ள முடியுமோ?-நமு தோரை நோ தோஷி -'வரவிருக்கும் பகவானுக்கு வெற்றி' என்ற அவன் மொழிகள் அவர்கள் செவிகளில் விழுந்தன.

இதோ கேள்' என்று கெஞ்சி கனிவுடன் அவள் கவனத்தை முதியவன் குரலின் பக்கம் திருப்பினான். 'நம் காதல் வரும் பிறவிகள் பலவற்றிலும் நீடித்திருக்கும் என்பதற்குரிய நற்சகுன மல்லவா இது?' என்று கூறி அவன் இப்பாடலை எடுத்துச் சுட்டிக் காட்டினான்.

6

‘வருகின்ற பிறவிகளி லெல்லாம் நம் காதல் மாறாமல் நீடித்து வாழும் என்ற இன்சொல்

தருகின்ற பெருமான்றன் அடியார் வாய் மொழியைத் தட்டாமல் மெய்வாழ்வு வாழ்தி நன்னெஞ்சே!'

மாளாப்பழி' என்ற பழங் கதையில் வரும் காதல் துணைவர்கள் ஒரு சிறகைப் பொதுவாகக் கொண்ட இரு துணைப் பறவைகளைப் போல வாழ வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள். அவ்வாறே தாமும் வேண்டிக் கொள்ள