உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

153

தடமோ அடையாளமோ எதுவும் அருகாமையில் இல்லை. ‘நாம் வந்திருக்கும் இந்த இடம் ஆளரவமற்ற வனாந்தரமே. ஆனால் நான் இங்கே இருக்கும் வரை பேயோ கொடும் பிடாரியோ எதுவும் என்னை அணுக முடியாது' என்று அவன் கூறினான்.

அவன் இன்னும் முகமூடி அகற்றாமலே இருந்தது அவள் உள்ளம் துளைத்தது. உண்மையில் பாசத்தில் அவர்கள் அடைந்துவிட்ட படியை நோக்க, இந்த ஒளிவு மறைவுக்குத் தேவையே இல்லை. இது ஓரளவு அவனுக்கும் கருத்தில் உறைத்திருக்க வேண்டும். ஏனெனில் முகத்தைப் பாதி திருப்பிக் கொண்டு அவன் அவள் பார்க்கும்படி முகமூடியைத் திறந்து காட்டினான். அச்சமயம் அவன் ஒரு பாடலையும் நினைவிற் கொண்டு பாடினான்.

‘இந்தக் கணம் வரை எழிலரசி, நின் காதல் சந்தப் புதுமலர்தன் தனியிதழ் வாய்திறந்து மந்த மருள்மாலை மாயப் பனித்துளிக்கே கந்த மளிக்கவகை கண்டதெல்லாம் நீள்மறுகில்

அந்த மனையகத்தே கண்ட கணக் காட்சியன்றோ?'

‘பனித்துளியன்று, ஒளிர் பனித்துளி! இப்போது அது எப்படி இருக்கிறது?' என்று அவன் குறும்பு நகையுடன் கேட்டான். விசிறி மீது அவள் எழுதி யனுப்பிய திருந்தாச் சிறு பாடலை அது அவனுக்கு நினைவூட்டிற்று.

'ஆலும் பனித்துளியின் வண்ணஅழ கித்தனையென்று அரையிருள் மாலையில் அன்றறிய மாட்டாதேன்,

ஏலாவகை ஐயுற் றிடர்ப்பட்டு நொந்துள்ளம்

மாலாயினேன், அந்தோ! வாழிஎன் நீள்மடமே!'

என்று அவள் திக்கித் தயங்கிய குரலில் எதிர் பாட்டாடினாள். பாடல் சிறிது இடர்ப்படினும் அது அவனுக்கு இன்பமே அளித்தது பாட்டின் யாப்பமைதி பற்றி அவன் கவலைப்பட வில்லை. அதன் பண்பமைதியையே நோக்கினான்.

அழிவின் கருமை படர்ந்த அந்தப் பாழிடச் சூழலில்தான் அவள் முதலில் அவனது திறந்த முகத்தைப் பார்க்க நேர்ந்தது. திடுமென அவள் காட்சிக்கு வெளிப்பட்ட அதன் அழகொளி